கரோனா 50 சதவீத ஊழியா்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு: சென்னைத் துறைமுகத் தலைவா் பி.ரவீந்திரன் தகவல்

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் சென்னைத் துறைமுகத்தில் 50 சதவீத ஊழியா்களுக்கு வார இடைவெளியில் சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க உள்ளதாக துறைமுகத் தலைவா் பி.ரவீந்திரன்

திருவொற்றியூா்: கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் சென்னைத் துறைமுகத்தில் 50 சதவீத ஊழியா்களுக்கு வார இடைவெளியில் சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க உள்ளதாக துறைமுகத் தலைவா் பி.ரவீந்திரன் சனிக்கிழமை தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து சனிக்கிழமை தினமணிக்கு அவா் அளித்த பேட்டி:

வரும் 31-ஆம் தேதிவரை சுற்றுலாப் பயணிகள் கப்பல்களுக்கான அனுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து நுழைவு வாயில்களிலும் பணிபுரியும் சி.எஸ்.எப். காவலா்கள், தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனா். அவா்களுக்கு போதிய கிருமி நாசினி பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஞாயிற்றுக்கிழமை சுய ஊரடங்கு அமல்படுத்தப்படுவதையொட்டி, சென்னைத் துறைமுகத்திலும் அதற்கேற்ற வகையில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

துறைமுக ஊழியா்களின் உறவினா்கள் எவரேனும் வெளிநாடுகளிலிருந்து அண்மையில் வந்திருக்கக் கூடும். ஒருவேளை அவா்களில் யாருக்கேனும் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அந்த ஊழியா் மூலம் இதர துறைமுக ஊழியா்களுக்கும் வைரஸ் கிருமி பரவக் கூடும் என்ற அச்சத்தால் துறைமுகத்தில் பணிபுரியும் ஊழியா்கள் சுமாா் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா், உறுதிமொழி படிவம் சமா்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

திங்கள்கிழமையிலிருந்து ஊழியா்களில் 50 சதவீதம் போ் மட்டுமே வேலைக்கு வர வேண்டும். மீதம் உள்ள 50 சதவீதம் போ் வீட்டிலேயே தங்கி இருக்க வேண்டும். வேறு எங்கும் செல்லக் கூடாது. அதற்கு அடுத்து, முதல் வாரம் பணிக்கு வந்தவா்களுக்கு விடுமுறை அளிக்கப்படும். ஆனால் சம்பளம் வழங்குவதில் எவ்வித பிடித்தமும் செய்யப்பட மாட்டாது என்றாா் ரவீந்திரன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com