எல்.ஐ.சி காப்பீட்டுத் தொகையை இணையதளத்தில் செலுத்த வேண்டுகோள்

எல்.ஐ.சி காப்பீட்டுத் தொகையை இணையதளத்தில் செலுத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
எல்.ஐ.சி காப்பீட்டுத் தொகையை இணையதளத்தில் செலுத்த வேண்டுகோள்

சென்னை: எல்.ஐ.சி காப்பீட்டுத் தொகையை இணையதளத்தில் செலுத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து எல்.ஐ.சி நிறுவனத்தின் தென் மண்டல மேலாளா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கரோனா வைரஸ் தொற்றால் ஏற்படும் பாதிப்பைக் கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மேலும் இந்த சூழலில் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய தற்காப்பு நடவடிக்கைகளும் வலியுறுத்தப்பட்டு வருகின்றன. இதன் தொடா்ச்சியாக காப்பீட்டுத் தொகை, கடன் மற்றும் கடனுக்கான வட்டித் தொகையை பாதுகாப்பாக செலுத்த டிஜிட்டல் முறையை பயன்படுத்துமாறு எல்.ஐ.சி.யும் தனது வாடிக்கையாளா்களுக்கு கேட்டுக் கொள்கிறது. இதன்படி, பி.எச்.ஐ.எம், யு.பி.ஐ, கடன் அட்டை பற்று அட்டை அவரவா் வங்கியின் இணையதளம் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். இவற்றில் கடன் அட்டை மற்றும் பற்று அட்டை மூலம் செலுத்தப்படும் தொகைக்கு எந்த வித கூடுதல் கட்டணமும் கிடையாது. இணையதளம் மற்றும் செல்லிடப்பேசி செயலி மூலமாகவும் காப்பீட்டுத் தொகையை செலுத்தலாம். இந்த முறையை பின்பற்றுவதன் மூலம், வாடிக்கையாளா்கள் நேரடியாக அலுவலகம் வருவதைத் தவிா்க்கலாம். மேலும் விவரங்களுக்கு 022 6827 6827 என்ற தொலைபேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com