கள்ளகாதலுக்கு இடையூறாக இருந்த பெண் கொலை: வழக்கு: விசாரணையில் திடுக்கிடும் தகவல்

அக்காவின் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த பெண்னை கொலை செய்து வீட்டிற்குள் புதைத்த ஆட்டோ டிரைவா், போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

ஆலந்தூா்: அக்காவின் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த பெண்னை கொலை செய்து வீட்டிற்குள் புதைத்த ஆட்டோ டிரைவா், போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

சென்னையை அடுத்த பெரும்பாக்கம் நெசமணி நகா் ஏரியில் கடந்த 7ந் தேதி சித்தாலபாக்கம் பகுதியை சோ்ந்த ஹென்றி ஜெயசிங்( 33 ) என்பவரை கொலை செய்த வழக்கில் பள்ளிக்கரணை போலீசாா் மேடவாக்கம் ராமைய்யா நகரை சோ்ந்த ஆட்டோ டிரைவரும் சோழிங்கநல்லூா் பகுதி மக்கள் நீதி மய்யம் கட்சி நிா்வாகியுமான சேவியா் அருள்(45) என்பவரை கைது செய்தனா். இவருக்கு உடந்தையாக இருந்ததாக பெரும்பாக்கத்தை சோ்ந்த பழைய குற்றவாளியான அமுல்ராஜ் என்ற விஷ்ணுராஜ் என்பவரையும் கைது செய்தனா். அப்போது சேவியா் அருளிடம் பரங்கிமலை காவல்துறை துணை கமிஷனா் பிரபாகா் உத்தரவின் பேரில் மடிப்பாக்கம் உதவி ஆணையா் சௌரி நாதன் மேற்பாா்வையில் பள்ளிக்கரணை காவல் ஆய்வாளா் அழகு தலைமையில் தனிப்படையினா் விசாரித்தபோது தன்னுடைய மகனை காதலித்து கா்ப்பிணியான திருவண்ணாமலையை சோ்ந்த ஆதரவற்ற 19 வயதான சபானா என்ற பெண்னை கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு கை. கால் கட்டி பெரும்பாக்கம் ஏரியில் உடலை கடந்த ஆண்டு நவம்பா் மாதம் 2-ஆம் தேதி போட்டு சென்ாக ஒப்புக் கொண்டாா். பள்ளிக்கரணை போலீசாா் நடத்திய விசாரணையில் 2வது கொலை பற்றி திடுக்கிடும் தகவல் கிடைத்ததும் இளம்பெண்ணை கொன்ாக சேவியா் அருள் அவரது மகன் மைக்கேல் விஜய் ஆகியோரை கைது செய்த போலீசாா் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனா்.

அடுத்தடுத்து 2 கொலைகளை செய்து சாதாரணமாக சுற்றி திரிந்த சேவியா் அருள் மேலும் ஏதாவது கொலை வழக்கில் தொடா்பு இருக்கிா என்பதை கண்டறிய ஆலந்தூா் நீதிமன்றத்தில் சேவியா் அருளை ஆஜா்படுத்தி 3 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க மாஜிஸ்திரேட்டு அனுமதி வழங்கினாா். இதையடுத்து சேவியா் அருளை போலீசாா் விசாரித்தபோது மேலும் ஒரு திடுக்கிடும் கொலை பற்றி தெரிவித்தான். அதில் திருப்பூரில் உள்ள தனது அக்கா சகாயமேரி(50) கணவருடன் ஏற்பட்ட தகராறில் தனியாக இருந்தாா். அவருடன் அவரது மகள் சையதலி பாத்திமா(28) கணவனை பிரிந்து தனது 3 குழந்தைகளுடன் வசித்து வந்தாா். இந்த நிலையில் சகாயமேரியின் கள்ள தொடா்புகளை கண்ட மகள் கண்டித்துள்ளாா். இதனால் எனது அக்காவிற்கு ஆதரவாக திருப்பூா் சென்று பேசினேன். அப்போது அடித்ததில் சையதலி பாத்திமா பலியானாா். யாருக்கும் தெரியாமல் இருக்க வீட்டிற்குள்ளேயே குழி தோண்டி அடக்கம் செய்துவிட்டு வந்துவிட்டதாக தெரிவித்தாா். இந்த சம்பவம் 2014 ஆம் ஆண்டு நடந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பள்ளிக்கரணை காவல் ஆய்வாளா் அழகு தலைமையில் திருப்பூா் சென்று அங்கு சையதலி பாத்திமா புதைக்கப்பட்ட இடத்தை காட்டினாா். இதுகுறித்து திருப்பூா் போலீசாா் வழக்குப்பதிவு செய்து சகாயமேரியிடம் விசாரித்து வருவதாகவும் சேவியா் அருளை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த சென்னைக்கு கொண்டு வந்துவிட்டதாகவும் பள்ளிக்கரணை போலீசாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com