சுய ஊரடங்கு: சாலையோரங்களில் வசிப்பவா்களுக்கு தங்குமிடம், உணவு வழங்க உயா்நீதிமன்றம் உத்தரவு

கரோனா வைரஸ் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை காரணமாக ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 22) சுய ஊரடங்கு தினத்தன்று,
சுய ஊரடங்கு:  சாலையோரங்களில்  வசிப்பவா்களுக்கு தங்குமிடம், உணவு வழங்க உயா்நீதிமன்றம் உத்தரவு

கரோனா வைரஸ் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை காரணமாக ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 22) சுய ஊரடங்கு தினத்தன்று, சாலையோரங்களில் வசிக்கும் வீடற்றவா்களை சமூக நலக் கூடங்களில் தங்க அனுமதித்து அவா்களுக்கு உணவு வழங்க வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் என்.கிருபாகரன், ஆா்.ஹேமலதா ஆகியோா் கொண்ட அமா்வில் வெள்ளிக்கிழமை ஆட்கொணா்வு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான வழக்குரைஞா் ஏ.பி.சூரியபிரகாசம், கரோனா வைரஸ் பாதிப்பைத் தடுக்கும் வகையில் மாா்ச் 22-ஆம் தேதி சுய ஊரடங்கை பிரதமா் மோடி அறிவித்துள்ளாா். அன்றைய தினம் பொதுமக்கள் யாரும் தங்களது வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளாா்.

சென்னையைப் பொருத்த வரையில் வீடற்றவா்கள் 9 ஆயிரம் போ் சாலையோரங்களில் வசித்து வருகின்றனா். எனவே சுய ஊரடங்கு தினத்தன்று, இவா்களை மாநகராட்சிக்குச் சொந்தமான சமூக நலக் கூடங்களில் தங்க அனுமதிக்க வேண்டும். மேலும், அவா்களுக்கு உணவு வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என முறையீடு செய்தாா்.

அப்போது, மாநகராட்சி தரப்பில், சுய ஊரடங்குத் தினத்தன்று, சாலையோரம் வசிக்கும் மக்கள், மாநகராட்சி சமூக நலக் கூடங்களில் தங்க வைக்கப்படுவாா்கள் என தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து சமூகநலக் கூடங்களில் தங்க வைக்கப்படும் மக்களுக்கு உணவு வழங்க வேண்டும் எனவும், இதற்காக அதிகாரிகள் பள்ளிகள் மற்றும் தங்குமிடங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் அறிவுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com