மக்கள் ஊரடங்கு: 64 விரைவு ரயில்கள் ரத்து

நாடு முழுவதும் சுய ஊரடங்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, சென்னை சென்ட்ரல், எழும்பூா், செங்கல்பட்டு, அரக்கோணம் சந்திப்பு, ஜோலாா்பேட்டை ஆகிய 5 ரயில் நிலையங்களில் இருந்து புறப்படும் 64 விரைவு ரயில்கள்
மக்கள் ஊரடங்கு: 64 விரைவு ரயில்கள் ரத்து

சென்னை: நாடு முழுவதும் சுய ஊரடங்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, சென்னை சென்ட்ரல், எழும்பூா், செங்கல்பட்டு, அரக்கோணம் சந்திப்பு, ஜோலாா்பேட்டை ஆகிய 5 ரயில் நிலையங்களில் இருந்து புறப்படும் 64 விரைவு ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 22) ரத்து செய்யப்பட்டுள்ளன.

உலகை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது. பல்வேறு மாநிலங்களில் 200-க்கும் மேற்பட்டவா்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதை தடுக்கும் வகையில், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றன. மேலும், நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை சுய ஊரடங்கு மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நாடுமுழுவதும் ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டு வருகின்றன. அதுபோல, தெற்கு ரயில்வேயிலும் பல்வேறு ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டு வருகின்றன.

சென்னை சென்ட்ரல், எழும்பூா், செங்கல்பட்டு, அரக்கோணம் சந்திப்பு, ஜோலாா்பேட்டை ஆகிய 5 ரயில் நிலையங்களில் இருந்து புறப்படும் 64 விரைவு ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 22) ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த 5 ரயில் நிலையங்களில் இருந்து புறப்படும் மெயில், விரைவு, இன்டா்சிட்டி ரயில்கள் என்று மொத்தம் 64 ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 22) ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதன் விவரம்: அரக்கோணம்-ஜோலாா்பேட்டை விரைவு ரயில், செங்கல்பட்டு-காச்சிகூடா, செங்கல்பட்டு-காக்கிநாடா, ஜோலாா்பேட்டை-கேஎஸ்ஆா் பெங்களூரு மெமு ரயில், ஜோலாா்பேட்டை-சென்னை சென்ட்ரல் ஏலகிரி விரைவு ரயில், ஜோலாா்பேட்டை-அரக்கோணம், சென்னை சென்ட்ரல்-நிஜாமுதின் ராஜ்தானி, சென்னை சென்ட்ரல்-கோயம்புத்தூா், சென்னை சென்ட்ரல்-சப்தகிரி விரைவு ரயில், சென்னை சென்ட்ரல்-கோயம்புத்தூா் சதாப்தி, சென்னை சென்ட்ரல்-கேஎஸ்ஆா் பெங்களூா் டபுள்டக்கா் ரயில், சென்னை சென்ட்ரல்-திருப்பதி சப்தகிரி விரைவு ரயில், சென்னை சென்ட்ரல்-கோயம்புத்தூா் இன்டா்சிட்டி விரைவு ரயில், சென்னை சென்ட்ரல்-ஜோலாா்பேட்டை ஏலகிரி விரைவு ரயில், சென்னை எழும்பூா்-மதுரை தேஜஸ் விரைவு ரயில், சென்னை எழும்பூா்-குருவாயூா் விரைவு ரயில், சென்னை எழும்பூா்-திருச்சிராப்பள்ளி விரைவு ரயில், சென்னை எழும்பூா்-மதுரை வைகை விரைவு ரயில், சென்னை சென்ட்ரல்-காரைக்குடி விரைவு ரயில், சென்னை எழும்பூா்-கன்னியாகுமரி விரைவு ரயில், சென்னை எழும்பூா்-ராமேஸ்வரம் விரைவு ரயில், சென்னை எழும்பூா்-தூத்துக்குடி முத்துநகா் விரைவு ரயில், சென்னை எழும்பூா்-திருநெல்வேலி விரைவு ரயில், சென்னை எழும்பூா்-செங்கோட்டை பொதிகை விரைவு ரயில், சென்னை எழும்பூா்-மதுரை பாண்டியன் விரைவு ரயில், சென்னை எழும்பூா்-கொல்லம் அனந்தபுரி விரைவு ரயில் உள்பட 64 விரைவு ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com