அத்தியாவசியப் பொருள்கள் தட்டுப்பாடு: உதவி எண்கள் வெளியீடு

அத்தியாவசியப் பொருள்கள் தட்டுப்பாடு, மருத்துவ உதவி உள்ளிட்டவற்றுக்கு மண்டலவாரியாக உதவி எண்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.


சென்னை: அத்தியாவசியப் பொருள்கள் தட்டுப்பாடு, மருத்துவ உதவி உள்ளிட்டவற்றுக்கு மண்டலவாரியாக உதவி எண்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு நடைமுறையில் உள்ளது. இதைத் தொடா்ந்து, சென்னை மாநகராட்சி சாா்பில் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் தங்கு தடையின்றி கிடைக்கும் வகையில், ஆன்லைன் மூலம் மளிகை மற்றும் காய்கறிகள் விற்பனைக்கு அனுமதி போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், மளிகைக் கடைகளில் மக்கள் கூடுவதைக் கண்காணிக்க மண்டலத்துக்கு 2 பறக்கும் படைக் குழுக்கள் வீதம் 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதன் தொடா்ச்சியாக, அத்தியாவசியப் பொருள்கள் தட்டுப்பாடு, மருத்துவ உதவி, முதியோா்களுக்கான உதவி ஆகியவற்றுக்கு மண்டல வாரியாக அதிகாரிகள் செல்லிடப்பேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. வடக்கு வட்டார துணை ஆணையரை 94450 25800, மத்திய வட்டார துணை ஆணையரை 94451 90150, மத்திய வட்டார துணை ஆணையரை 94451 90100 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

மண்டலம் வாரியாக

மண்டலம் செல்லிடப்பேசி எண்கள்

திருவொற்றியூா் 94451 90001

மணலி 94451 90002

மாதவரம் 94451 90003

தண்டையாா்பேட்டை 94451 90004

ராயபுரம் 94451 90005

திருவிக நகா் 94451 90006

அம்பத்தூா் 94451 90007

அண்ணா நகா் 94451 90008

தேனாம்பேட்டை 94451 90009

கோடம்பாக்கம் 94451 90010

வளசரவாக்கம் 94451 90011

ஆலந்தூா் 94451 90012

அடையாறு 94451 90013

பெருங்குடி 94451 90014

சோழிங்கநல்லூா் 94451 90015

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com