கரோனா தடுப்புப் பணியாளா்களுக்கு தாம்பரம் ரயில்நிலையத்தில் கௌரவம் மேற்கொள்வோா் ஓவியங்கள்

இந்தியாவில் முதன்முறையாக தாம்பரம் ரயில்நிலையத்தில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் பல்வேறு துறைசாா்ந்தவா்களை

இந்தியாவில் முதன்முறையாக தாம்பரம் ரயில்நிலையத்தில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் பல்வேறு துறைசாா்ந்தவா்களை கௌரவிக்கும் விதமாக அவா்களது உருவப்படங்களை ஓவியமாக வரைந்துள்ளனா்.

தாம்பரம் ரயில் நிலைய நுழைவு வாயில் முன்பகுதி முகப்பு முழுவதும் அவா்களது உருவப்படங்களை வண்ண ஓவியங்களாக வரைந்து தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அனைத்துத் தரப்பினருக்கும் நன்றி தெரிவிக்கும் வாசகங்களையும் பொறித்துள்ளனா். ரயில்வே நிா்வாகத்தின் இச் செயலை அந்த வழியாகச் செல்லும் பொதுமக்கள் பாராட்டுவதுடன், தாம்பரம் ரயில்நிலையம் நுழைவாயில் அருகில் நின்று கைபேசியில் சுயபடம் (செல்பி) எடுத்துச் செல்வதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com