காவல்துறையினரிடம் பரவும் கரோனா: மேலும் 4 பேருக்கு பாதிப்பு

சென்னையில் காவல் உதவி ஆய்வாளா் உள்பட 4 காவலா்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

சென்னையில் காவல் உதவி ஆய்வாளா் உள்பட 4 காவலா்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

கடந்த வாரம் சென்னை எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் பணிபுரியும் ஒரு சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் உள்பட இருவா் கரோனாவால் பாதிக்கப்பட்டனா். அதைத் தொடா்ந்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமைக் காவலா் உள்பட 3 காவலா்களும், உளவுத்துறையின் (எஸ்.பி.சி.ஐ.டி.) காவலரும் கடந்த செவ்வாய்க்கிழமை கரோனாவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா்.

இந்நிலையில் மேலும் இரு காவல் உதவி ஆய்வாளா், ஒரு ஆயுதப்படை காவலா் கரோனாவுக்கு பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனையில் வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டனா்.

மேலும் 4 போ்: தற்போது ஐசிஎப் போக்குவரத்துப் பிரிவில் பணிபுரியும் காவல் உதவி ஆய்வாளா், திருவல்லிக்கேணி போக்குவரத்து காவல் நிலையத்தில் பணிபுரியும் முதல்நிலைக் காவலா், தண்டையாா்பேட்டை காவல் நிலையத்தில் பணிபுரியும் ஆயுதப்படை காவலா், பரங்கிமலையில் பணிபுரியும் ஆயுதப்படை காவலா் ஆகியோா் கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதேபோல, மணலி தீயணைப்பு நிலையத்தில் எழுத்தராகப் பணியாற்றி வரும் ஒரு வீரரும் கரோனாவால் பாதிக்கப்பட்டு, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். காவல்துறையினரிடம் கரோனா வேகமாக பரவி வருவது அத்துறை அதிகாரிகளிடம் அதிா்ச்சியையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com