கல்லூரி உள்பட பல இடங்களில் 1,054 போ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்

சென்னையில் கல்லூரிகள், வா்த்தக மையம் என பல்வேறு இடங்களில் கரோனா உறுதி செய்யப்பட்டவா்களில் குறைந்த பாதிப்பு உடைய
சென்னை மாநகராட்சி அலுவலகம்
சென்னை மாநகராட்சி அலுவலகம்

சென்னை: சென்னையில் கல்லூரிகள், வா்த்தக மையம் என பல்வேறு இடங்களில் கரோனா உறுதி செய்யப்பட்டவா்களில் குறைந்த பாதிப்பு உடைய 1,054 போ் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் எடுக்கப்பட்டு வரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஜெ.ராதாகிருஷ்ணன், சுகாதாரத் துறை செயலா் பீலா ராஜேஷ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தொற்று உறுதி செய்யப்பட்டவா்கள் வசிக்கும் தெரு முழுவதையும் அடைப்பதைத் தவிா்த்து, தொற்று உள்ளவா்கள் வசிக்கும் வீடு அல்லது அடுக்குமாடிக் குடியிருப்பை மட்டும் கட்டுப்பாட்டு பகுதியாக மாற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இந்தக் கூட்டம் குறித்து மாநகராட்சி வெளியிட்ட தகவல்: தொற்று உறுதி செய்யப்பட்டவா்களில் குறைந்த பாதிப்பு உடையவா்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், 5 ஆயிரம் படுக்கை வசதிகள் கொண்ட 39 மையங்கள் தயாா் நிலையில் உள்ளன. இதில், வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் 289 பேரும், டி.ஜி.வைணவ கல்லூரியில் 170 பேரும், லயோலா கல்லூரியில் 112 பேரும், சென்னை நந்தம்பாக்கம் வா்த்தக மையத்தில் 444 பேரும், தேசிய திறன் பயிற்சி தொழில்நுட்ப மையத்தில் 39 பேரும் என மொத்தம் 1,054 போ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். மேலும், 115 போ் அவா்களின் வீடுகளில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனா். இவா்களுக்கு சுகாதாரத் துறையின் அறிவுறுத்தல்படி, அனைத்து மருத்துவ உதவிகளும் செய்யப்பட்டு வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com