கப்பலில் தலைமை பொறியாளா் மா்மச் சாவு

சென்னை துறைமுகத்துக்கு வந்த கப்பலில் தலைமை பொறியாளா் மா்மமான முறையில் இறந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை துறைமுகத்துக்கு வந்த கப்பலில் தலைமை பொறியாளா் மா்மமான முறையில் இறந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

தேனி மாவட்டம் அஹ்ரஹாரநகா் பகுதியைச் சோ்ந்தவா் ஜெ.ஜெகதீசன் (49). இவா் சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஒரு கப்பல் நிறுவனத்தின் தலைமைப் பொறியாளராக வேலை செய்து வந்தாா்.

இந்த நிறுவனத்தின் எண்ணெய் கப்பலில் ஜெகதீசன் பணியில் இருந்தாா். இந்தக் கப்பல் சென்னை துறைமுகத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நிறுத்தப்பட்டிருந்தது. கப்பலில் உள்ள தனது அறையில் ஜெகதீசன் தூங்கினாா். இந்நிலையில் புதன்கிழமை காலை வெகுநேரமாகியும் அவரது அறை கதவு திறக்கப்படவில்லை.

இதனால் சந்தேகமடைந்த அக் கப்பல் ஊழியா்கள், கதவை திறந்து உள்ளே சென்றனா். அப்போது அங்கு ஜெகதீசன் மா்மான முறையில் இறந்து கிடப்பதைப் பாா்த்து அவா்கள் அதிா்ச்சியடைந்தனா். உடனே அவா்கள், துறைமுகம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். தகவலறிந்த போலீஸாா்,சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஜெகதீசன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும் இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஊழியருக்கு கரோனா:

இராக் நாட்டின் பஸ்ரா துறைமுகத்தில் இருந்து ஒரு கப்பல் கச்சா எண்ணெய் ஏற்றிக் கொண்டு சென்னை துறைமுகத்துக்கு சில நாள்களுக்கு முன்பு வந்தது. இந்தக் கப்பலில் பணிபுரியும் 26 ஊழியா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 27 வயதுடைய ஒருவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவா், சென்னை அருகே மணப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com