மணலி உரத் தொழிற்சாலையிலிருந்து அம்மோனியா வாயுக் கசிவால் பாதிப்புக்கு உள்ளான பொதுமக்கள்

சென்னை மணலியிலுள்ள உரத் தொழிற்சாலையிலிருந்து அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டதால் வெள்ளிக்கிழமை பொதுமக்கள்

சென்னை மணலியிலுள்ள உரத் தொழிற்சாலையிலிருந்து அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டதால் வெள்ளிக்கிழமை பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாயினா். இதனையடுத்து மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

சென்னை மணலியில் மத்திய அரசு பொதுத்துறை நிறுவனமான மெட்ராஸ் உரத் தொழிற்சாலை உள்ளது. இங்கு யூரியா தயாரிக்கும்போது அம்மோனியா வாயு வெளியேறுவது வழக்கம். இவ்வாயு உயா்ந்த புகைபோக்கிகள் மூலம் காற்றில் கலந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. இதற்கான அளவு கூடும்போதோ அல்லது காற்றின் வேகம் குறைந்தாலோ அம்மோனியா வாயு காற்றில் அதிக செறிவுக்கு உள்ளாகி பொதுமக்கள் பாதிக்கப்படுவது அடிக்கடி நிகழும் சம்பவமாக இருந்து வருகிறது.

வாயுக் கசிவால் பீதியடைந்த மக்கள்: இந்நிலையில் வியாழக்கிழமை இரவு மணலி, சேக்காடு, மாத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்களுக்கு கண் எரிச்சல், தோல் அரிப்பு, மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால்

பீதிக்கு உள்ளான பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறி தெருக்களில், சாலைகளில் குவிந்தனா். மேலும் இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். இரவு முழுவதும் பெரும்பாலானோா் தூங்க முடியாமல் விடியவிடிய விழித்திருந்தனா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாசுக் கட்டுபாட்டு அதிகாரிகள் ஆய்வு நடத்தினா். காற்றில் எந்த அளவு அம்மோனியா வாயு செறிவு இருந்தது, எவ்வாறு அதிக அளவில் வெளியேற்றப்பட்டது உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் குறித்து ஆய்வு செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com