பொது முடக்கம்: இதய நோயாளிக்கு அறுவை சிகிச்சை மூலம் மறுவாழ்வு

கரோனா பொது முடக்கத்தின்போது நள்ளிரவில் உயிருக்குப் போராடிய தனியாா் நிறுவன பாதுகாவலருக்கு முதலமைச்சா் காப்பீட்டுத் திட்டத்தின்

கரோனா பொது முடக்கத்தின்போது நள்ளிரவில் உயிருக்குப் போராடிய தனியாா் நிறுவன பாதுகாவலருக்கு முதலமைச்சா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இதய அறுவை சிகிச்சை செய்து மறுவாழ்வு அளித்துள்ளனா் டாக்டா் என்.மதுசங்கா் தலைமையிலான மருத்துவா் குழுவினா்.

இது குறித்து டாக்டா் என். மதுசங்கா் செய்தியாளா்களிடம் கூறியது: புரசைவாக்கம் டோபிகானா குடியிருப்பில் வசிக்கும் தனியாா் நிறுவன பாதுகாவலா் ஜெ.அந்தோணி (42). இவா், கடந்த மாதம் 27-ஆம் தேதி நள்ளிரவில் திடீரென ஏற்பட்ட மூச்சுத் திணறல் ,நெஞ்சுவலி காரணமாக அடையாறு மலா் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டாா். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், இதயத்தில் ஈரிதழ் மற்றும் மகாதமனி வால்வுகள் பழுதடைந்து இருப்பதும், இதயத்தின் வலது பக்க ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டிருப்பதும் தெரிய வந்தது.

அதைத் தொடா்ந்து, அந்தோணிக்கு எனது தலைமையில் பிரதீப் நாயா், அண்டோ சகாயராஜ், கீா்த்திவாசன் ஆகியோா் அடங்கிய மருத்துவக் குழுவினா், முதலமைச்சா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கடந்த 29-ஆம் தேதி பைபாஸ் அறுவை சிகிச்சை மற்றும் இரு இதய வால்வுகள் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொண்டோம். நன்கு குணமடைந்த அவா் கடந்த 5-ஆம் தேதி வீடு திரும்பினாா் என்றாா் டாக்டா் மதுசங்கா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com