விழுப்புரம் சிறுமி எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி

விழுப்புரம் மாவட்டத்தில் சிறுமி ஜெயஸ்ரீ எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உத்தரவிடக் கோரிய வழக்கு வாபஸ் பெறப்பட்டதையடுத்து வழக்கை தள்ளுபடி செய்து
விழுப்புரம் சிறுமி எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி

விழுப்புரம் மாவட்டத்தில் சிறுமி ஜெயஸ்ரீ எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உத்தரவிடக் கோரிய வழக்கு வாபஸ் பெறப்பட்டதையடுத்து வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆவடியைச் சேர்ந்த சுமதி என்பவர் தாக்கல் செய்த மனுவில், விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால். இவரது மகள் ஜெயஸ்ரீ பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த மே 10-ஆம் தேதி ஜெயபால் வீட்டுக்குள் நுழைந்த,  அதிமுக முன்னாள் கவுன்சிலரின் கணவரும், அதிமுக நிர்வாகியுமான முருகன் மற்றும் அதிமுக கிளை செயலாளர் யாசகன் என்ற கலியபெருமாள் ஆகியோர் வீட்டில் தனியாக இருந்தெ ஜெயஸ்ரீயை  கட்டிப்போட்டு,பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளனர். 

இதில் படுகாயமடைந்த ஜெயஸ்ரீ தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்ப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் முருகன் மற்றும் கலியபெருமாளை கைது செய்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக சிறுமி ஜெயஸ்ரீ மரண வாக்குமூலம் கொடுத்துள்ளார். இந்த சம்பவத்தில் கைதான இருவரும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் எனவே தமிழக போலீஸார் இந்த வழக்கை விசாரித்தால் நியாயம் கிடைக்காது. எனவே வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். 

இந்த வழக்கை நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், அனிதா சுமந்த் ஆகியோர் காணொலி காட்சி மூலம் விசாரித்தனர். அப்போது மனுதாரர் தரப்பு வழக்குரைஞர், இந்த வழக்கில் காவல்துறையினரின் விசாரணை திருப்திகரமாக இருப்பதாக சிறுமியின் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.எனவே இந்த வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதற்கு அனுமதியளித்த நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com