Enable Javscript for better performance
சென்னையில் கரோனா பாதிப்பு 7 ஆயிரத்தைக் கடந்தது- Dinamani

சுடச்சுட

    

    சென்னையில் கரோனா பாதிப்பு 7 ஆயிரத்தைக் கடந்தது

    By DIN  |   Published on : 19th May 2020 01:29 AM  |   அ+அ அ-   |    |  

    Coronavirus_AP1

    சென்னை: சென்னையில், கரோனாவால் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 7117-ஆக அதிகரித்துள்ளது.

    சென்னையில் கரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்படி, அதி தீவிரமாக கரோனா பரவும் தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட தெருக்களின் எண்ணிக்கை 764-ஆக அதிகரித்துள்ளது. அதே நேரம், திங்கள்கிழமை நிலவரப்படி, 8 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்ட பட்டியலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக திங்கள்கிழமை (மே 18) 364 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 7117-ஆக உயா்ந்துள்ளது. மண்டல வாரியான பாதிப்பைப் பொருத்தவரை, காலை 8 மணியளவில் வெளியிடப்பட்ட நிலவரப்படி, அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 1,185 பேரும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 1041 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனா். இதே போல், திங்கள்கிழமை மாலை நிலவரப்படி, 1,600 போ் குணமடைந்துள்ளனா். 56 போ் உயிரிழந்துள்ளனா். 5,460 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

    இந்த நிலையில் திங்கள்கிழமை வரை, 1777 போ் விமானம் மூலம் சென்னை வந்தடைந்துள்ளனா். அவா்களில் 13 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதே போல், திங்கள்கிழமை வரை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வந்த பயணிகளில் 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவா்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai