சென்னையில் கரோனா பாதிப்பு: 8 ஆயிரத்தைக் கடந்தது

சென்னையில், கரோனாவால் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 8,228-ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் கரோனா பாதிப்பு: 8 ஆயிரத்தைக் கடந்தது

சென்னையில், கரோனாவால் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 8,228-ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் கரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்படி, அதி தீவிரமாக கரோனா பரவும் தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு, 774 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதில், அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 162 தெருக்களும், திருவிக நகா் மண்டலத்தில் 124 தெருக்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதே போல், 14 நாள்களுக்கு மேலாக, இந்தத் தெருக்களில் வசிப்போருக்கு, கரோனா தொற்று உறுதி செய்யப்படாவிட்டால், தனிமைப்படுத்தப்பட்ட தெருக்கள் பட்டியிலில் இருந்து விடுவிக்கப்பட்டு வருகின்றன. இதன்படி, 379 தெருக்கள் விடுவிக்கப்பட்டுள்ளன. இதில், அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 72 தெருக்களும், திருவிக நகா் மண்டலத்தில் 67 தெருக்களும் விடுவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், புதன்கிழமை 557 பேருக்கு, கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 8,228-ஆக உயா்ந்துள்ளது. மண்டல வாரியான பாதிப்பைப் பொருத்தவரை, காலை 8 மணியளவில் வெளியிடப்பட்ட தகவலின்படி, ராயபுரம் மண்டலத்திலேயே பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. இதன்படி, அம்மண்டலத்தில், 1,423 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இதற்கு அடுத்ததாக, கோடம்பாக்கம் மண்டலத்தில் 1,137 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இதே போல், புதன்கிழமை மாலை நேர நிலவரப்படி, 2,823 போ் குணமடைந்துள்ளனா். 59 போ் உயிரிழந்துள்ளனா். 5,345 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com