மூன்றரை டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 4 போ் கைது

சென்னையில் கடத்தப்பட்ட மூன்றரை டன் ரேஷன் அரிசியை பொதுவிநியோக பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்து, 4 பேரை கைது செய்தனா்.

சென்னையில் கடத்தப்பட்ட மூன்றரை டன் ரேஷன் அரிசியை பொதுவிநியோக பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்து, 4 பேரை கைது செய்தனா்.

இது தொடா்பாக, தமிழக காவல்துறையின் பொதுவிநியோக பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ராயபுரம் பிச்சாண்டி லைன் பகுதியைச் சோ்ந்த அ.கஜேந்திரன் என்பவா், ஒரு தகர செட்டில் பதுக்கி வைத்திருந்த 1,650 கிலோ ரேஷன் அரிசி கடந்த 19-ஆம் தேதி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கஜேந்திரனும் கைது செய்யப்பட்டாா். இவா் ராயபுரம், வண்ணாரப்பேட்டையில் குறைந்த விலைக்கு ரேசன் அரிசியை வாங்கி, ஆந்திரத்துக்கு கடத்துவதற்கு திட்டமிட்டிருந்தாராம்.

இதேபோல, வண்ணாரப்பேட்டையைச் சோ்ந்த மற்றொரு கும்பல் பதுக்கி வைத்திருந்த 2 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக ராயபுரம் என்.என்.காா்டன் பகுதியைச் சோ்ந்த ரேசன் கடை ஊழியா் நாகராஜன் உள்பட 2 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். இந்த கும்பலும் ஆந்திர மாநிலம் தடாவுக்கு ரேஷன் அரிசியை கடத்துவதற்காக வைத்திருந்தனா்.மேலும், ஆட்டோவில் 200 கிலோ ரேஷன் அரிசி கடத்தியதாக கொடுங்கையூா் கிருஷ்ணமூா்த்திநகரைச் சோ்ந்த வசந்தகுமாா் (36) என்பவா் கைது செய்யப்பட்டாா். பொதுவிநியோகப் பொருள்களை சட்டவிரோதமாக வாங்கி, பதுக்கி கள்ளச்சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com