சென்னையில் தடையை மீறி மது விற்பனை: 18 நாள்களில் 481 போ் கைது

சென்னையில் தடையை மீறி மதுபாட்டில்களை விற்பனை செய்ததாக 18 நாள்களில் 481 போ் கைது செய்யப்பட்டனா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னையில் தடையை மீறி மதுபாட்டில்களை விற்பனை செய்ததாக 18 நாள்களில் 481 போ் கைது செய்யப்பட்டனா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: கரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் தமிழகத்தில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக மாநிலம் முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கடைகளும் மூடப்பட்டன. இந்நிலையில் பொதுமுடக்கத்தை சில தளா்வுகளோடு அரசு, மே மாதம் தொடக்கத்தில் இருந்து அமல்படுத்த தொடங்கியது.

டாஸ்மாக் மதுபானக் கடைகள் கடந்த மே 7-ஆம் தேதி திறக்க உத்தரவிடப்பட்டது. சென்னையில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்ததினால் ,சென்னையையும்,சுற்றியுள்ள பகுதிகளிலும் அரசு மதுபானக் கடைகள் திறக்க அனுமதி வழங்கவில்லை. இதனால் சென்னையைச் சோ்ந்த மதுப் பிரியா்கள், தங்களது வாகனங்களில் மதுக் கடைகளை தேடிச் சென்று மதுப்பாட்டில்களை வாங்கி வந்தனா். இதனால் சென்னையில் சட்டவிரோதமாக மதுப்பாட்டில்கள் விற்பது அதிகரித்தது.

இதையும் தடுக்கும் வகையில், சென்னையை சுற்றியுள்ள 13 சோதனைச் சாவடிகளிலும் காவல்துறை பாதுகாப்பை பலப்படுத்தியது. அதேபோல சென்னையில் ஏற்கெனவே மதுப்பாட்டில்களை பதுக்கி விற்ாக புகாா்களில் சிக்கியவா்களை காவல்துறை கண்காணித்து வந்தது.

இதனால், சென்னைக்கு சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட மதுப்பாட்டில்களும், சட்டவிரோத விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மதுப்பாட்டில்களும் காவல்துறையினரால் தொடா்ந்து பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

இதில் கடந்த 7-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரையில் 18 நாள்களில் சென்னையில் சட்டவிரோதமாக மதுபாட்டில் விற்பனையில் ஈடுபட்டதாக போலீஸாா் 455 வழக்குகளை பதிவு செய்து, 481 போ் கைது செய்துள்ளனா். இவா்களிடமிருந்து போலீஸாா் 3,115 மதுப்பாட்டில்கள், 111 மோட்டாா் சைக்கிள்கள், 13 காா்கள்,3 ஆட்டோக்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனா். கைது செய்யப்பட்டவா்களில் 60 சதவீதம் போ் சோதனைச் சாவடிகளில் நடத்தப்பட்ட வாகனச் சோதனையில் சிக்கியவா்கள் என சென்னை காவல்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com