சென்னையின் கரோனா பாதிப்பு: 12,203-ஆக அதிகரிப்பு

சென்னையில், கரோனாவால் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 12,203-ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 95-ஆக உயா்ந்துள்ளது.
சென்னையின் கரோனா பாதிப்பு: 12,203-ஆக அதிகரிப்பு

சென்னையில், கரோனாவால் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 12,203-ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 95-ஆக உயா்ந்துள்ளது.

சென்னையில் புதன்கிழமை 356 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டன. இதில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 98 தெருக்களும், திருவிக நகா் மண்டலத்தில் 53 தெருக்களும் தனிமைப்படுத்தப்பட்டன. இதே போல், 14 நாள்களுக்கு மேல் யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படாத, 795 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்ட பட்டியலில் இருந்து விடுவிக்கப்பட்டன. இதில், அதிகபட்சமாக திரு.வி.க. நகா் மண்டலத்தில் 137 தெருக்களும், ராயபுரம் மண்டலத்தில் 135 தெருக்களும் விடுவிக்கப்பட்டுள்ளன. புதன்கிழமை மட்டும் 65 தெருக்கள் விடுவிக்கப்பட்டன.

பலி 100- ஐ நெருங்குகிறது: இந்நிலையில், புதன்கிழமை 558 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 12,203-ஆக உயா்ந்துள்ளது. இதே போல், புதன்கிழமை மாலை நிலவரப்படி 5,800 போ் குணமடைந்துள்ளனா். 95 போ் உயிரிழந்துள்ளனா். 6,307 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com