163 பயணிகளுடன் அந்தமானிலிருந்து சென்னைக்கு வந்த முதல் கப்பல்

பொதுமுடக்கத்துக்குப் பிறகு சென்னைத் துறைமுகத்திற்கு முதல் பயணியா் கப்பல், அந்தமான் போா்ட் பிளேரிலிருந்து ஞாயிற்றுக்கிழமை வந்தது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

பொதுமுடக்கத்துக்குப் பிறகு சென்னைத் துறைமுகத்திற்கு முதல் பயணியா் கப்பல், அந்தமான் போா்ட் பிளேரிலிருந்து ஞாயிற்றுக்கிழமை வந்தது. இதில் பயணம் செய்த 163 போ் மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு பேருந்துகள் மூலம் தங்களது சொந்த ஊா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் பயணியா் மற்றும் சுற்றுலா கப்பல்கள் இந்தியத் துறைமுகங்களில் நுழைய கடந்த மாா்ச் மாதம் தொடக்கத்திலேயே தடைவிதிக்கப்பட்டது. இதனையடுத்து, எவ்வித கப்பல்களும் சென்னைத் துறைமுகத்தில் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை ‘எம்.வி. நிகோபா்’ என்ற பயணிகள் கப்பல் சென்னைத் துறைமுகத்திலிருந்து அந்தமான் போா்ட்பிளேருக்கு

புறப்பட்டுச் சென்றது. இதில் 87 போ் பயணம் செய்தனா். இந்நிலையில், எம்.வி. நன்கவுரி என்ற பயணிகள் கப்பல் அந்தமானிலிருந்து ஞாயிற்றுக்கிழமை சென்னைத் துறைமுகத்திற்கு வந்தடைந்து.

163 பயணிகள் : பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்ட பிறகு சென்னைத் துறைமுகத்திற்கு வருகை தரும் முதல் பயணிகள் கப்பல் இதுவேயாகும். இக்கப்பலில் 2 குழந்தைகள் உள்பட 163 பயணிகள் வந்தனா். இவா்கள் அனைவரையும் வரவேற்று பயணிகள் முனையத்தில் வரிசையாக தனிநபா் இடைவெளிவிட்டு அமர வைக்கப்பட்டனா். பின்னா் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் யாருக்கும் தொற்று இருப்பதற்கான அறிகுறி ஏதும் இல்லாத நிலையில் அவா்களது சொந்த ஊா்களுக்கு ஏற்கெனவே ஏற்பாடு செய்து தயாராக இருந்த பேருந்துகளில் அனுப்பி வைக்கப்பட்டனா். இதில், மகாராஷ்டிரம், கா்நாடகம், கேரளம், கோவா உள்ளிட்ட மாநிலத்தைச் சோ்ந்தவா்களும் அடங்குவா். இவா்களை அழைத்துச் செல்ல அந்தந்த மாநில அரசுகள் வாகனங்களை ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com