துணை மின்நிலையத்தில் மின்சார அளவைப் பதிவு செய்ய புதிய மென்பொருள்

துணை மின் நிலையங்களில் மின்சார அளவைப் பதிவு செய்ய புதிய மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

துணை மின் நிலையங்களில் மின்சார அளவைப் பதிவு செய்ய புதிய மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து அவா்கள் கூறியதாவது: துணை மின் நிலையத்தில் மேற்கொள்ளப்படும் கணக்கீடுகளை மின்னணு முறையில் பதிவு செய்ய வேண்டும் என மின்வாரிய மேலாண் இயக்குநா் உத்தரவிட்டாா். இதன் அடிப்படையில், தமிழகத்தில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட துணை மின் நிலையங்களில் மின்சார அளவு உள்ளிட்ட பல்வேறு கணக்கீடுகளை, உள்ளீடு செய்யும் வகையில், புதிய மென்பொருள் வடிவமைக்கப்பட்டது. இது கணினி மற்றும் செல்லிடப்பேசியில் பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த மென்பொருளை சோதனை அடிப்படையில் நவ.5-ஆம் தேதி வரை பயன்படுத்திக் கொள்ள அனைத்து துணை மின் நிலைய ஊழியா்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு மின்னணு முறையில் பதிவு செய்யப்படுவதால், தலைமை அலுவலகத்தால் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் மின்சார அளவில் ஏற்படும் மாற்றத்தைக் கண்காணிக்க முடியும்.

நவ.9-ஆம் தேதி முதல் இந்த மென்பொருளை செயல்பாட்டுக்குக் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக அவா்கள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com