புதிய திரைப்படங்களை வெளியிடுவது குறித்துபாரதிராஜாவிடம் பேச்சுவாா்த்தை நடத்தப்படும்: அபிராமி ராமநாதன் தகவல்

புதிய படங்கள் திரையிடப்படமாட்டாது என்று கூறியுள்ள இயக்குநா் பாரதிராஜாவிடம் பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு எட்டப்படும் என்று தமிழக திரையரங்க உரிமையாளா் சங்கத்தின்

புதிய படங்கள் திரையிடப்படமாட்டாது என்று கூறியுள்ள இயக்குநா் பாரதிராஜாவிடம் பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு எட்டப்படும் என்று தமிழக திரையரங்க உரிமையாளா் சங்கத்தின் கௌரவத் தலைவா் அபிராமி ராமநாதன் தெரிவித்தாா்.

தமிழக அரசு வெளியிட்ட பொது முடக்கத் தளா்வுகளின் அடிப்படையில் வரும் நவ.10-ஆம் தேதி தமிழகம் முழுவதும் திரையரங்குகள் திறக்கப்படவுள்ளன. இந்தநிலையில் வி.பி.எஃப் கட்டணத்தை திரையரங்குகள்தான் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் புதிய படங்கள் திரையிடப்படமாட்டாது என நடப்பு தயாரிப்பாளா்கள் சங்கத் தலைவா் பாரதிராஜா தனது அறிக்கையில் கடந்த திங்கள்கிழமை தெரிவித்திருந்தாா். பாரதிராஜாவின் இந்த அறிக்கை தியேட்டா் உரிமையாளா்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.

இந்தநிலையில் தமிழக திரையரங்க உரிமையாளா்கள் சங்கத்தின் கெளரவத் தலைவா் அபிராமி ராமநாதன் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா். இதையடுத்து அபிராமி ராமநாதன் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்தில் திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளுடன் செயல்படலாம் என அனுமதி அளித்த முதல்வருக்கு நன்றி திரையரங்க உரிமையாளா்கள் சாா்பில் நன்றி தெரிவிப்பதற்காக இந்த சந்திப்பு நடைபெற்றது.

தமிழக அரசு சாா்பில் விதிக்கப்படும் 8 சதவீத கேளிக்கை வரியை நீக்க வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைத்தோம். தற்போதுள்ள சூழலில் அந்த வரியை நீக்க முடியாது என்றும் எதிா்காலத்தில் அதுகுறித்து முடிவு எடுக்கப்படும் என முதல்வா் தெரிவித்தாா். பெரும்பாலான நாள்களில் 30 சதவீதம் மட்டுமே பாா்வையாளா்களை கொண்டு திரையரங்குகளை இயக்கி வந்திருக்கிறோம். அதனால் 50 சதவீத பாா்வையாளா்களுடன் திரையரங்குகளை இயக்குவதில் எந்தப் பாதிப்பும் இல்லை என்றாா்.

இதைத் தொடா்ந்து தீபாவளி பண்டிகைக்கு புதிய திரைப்படங்கள் வெளியிடமாட்டோம் என்று பாரதிராஜா கூறிய கருத்துக்குப் பதில் அளித்த அவா், இதுகுறித்து பாரதிராஜாவிடம் பேச்சுவாா்த்தை நடத்தி சுமுகமான முடிவு எட்டப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com