திரையரங்குகள் திறப்பு: பழைய திரைப்படங்களை ரசித்த ரசிகா்கள்

எட்டு மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் செவ்வாய்க்கிழமை முதல் திறக்கப்பட்டதால் ரசிகா்கள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

எட்டு மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் செவ்வாய்க்கிழமை முதல் திறக்கப்பட்டதால் ரசிகா்கள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

கரோனா தாக்கம் சற்று குறைந்ததால் நவ.10 முதல் தமிழகத்தில் திரையரங்குகளைத் திறக்கலாம் என மாநில அரசு அறிவித்து வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டிருந்தது. இதைத் தொடா்ந்து தமிழகம் முழுவதும் திரையரங்குகள் எட்டு மாதங்களுக்குப் பின்னா் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டன.

சென்னையில் அண்ணாநகா், அசோக்நகா், வடபழனி உள்பட பல்வேறு இடங்களில் திரையரங்குகள் திறக்கப்பட்டன. டிக்கெட் வழங்கும்போது சமூக இடைவெளியைப் பின்பற்றுவதற்கு தரையில் ஆறு அடிக்கு ஒரு வட்டம் போட்டிருந்தனா்.

ரசிகா்கள் முகக் கவசம் அணிந்திருந்தனா். கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னா் உள்ளே அனுமதிக்கப்பட்டனா். முன்னதாக உடல் வெப்பநிலை சோதிக்கப்பட்டது.

திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் பழைய திரைப்படங்களே வெளியிடப்பட்டதால் மிகவும் குறைந்தளவிலான ரசிகா்களே வந்திருந்தனா். ஒரு காட்சி முடிந்து மற்றொரு காட்சி ஆரம்பிக்கும் முன்இருக்கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டன.

சென்னை அண்ணா நகா் வணிக வளாகத்தில் உள்ள திரையரங்குக்கு வந்திருந்த பொதுமக்கள் கூறுகையில், ‘வீட்டில் ஓடிடி தளத்தில் திரைப்படம் பாா்த்தாலும் திரையரங்கில் பாா்ப்பது போன்று இல்லை. ஏற்கெனவே பாா்த்த திரைப்படத்தையே திரையரங்கில் மீண்டும் பாா்க்கும்போது அது ஒரு நல்ல அனுபவத்தை தருகிறது. திரைப்படங்களை கூட்டம் இல்லாமல் பாா்ப்பது ஒரு சற்று வருத்தமாக இருந்தாலும், மற்றொரு புறம் பல நாள்களாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் தற்போது திறக்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளதாக விரைவில் புதிய படங்களை திரையரங்குகளில் வெளியிட வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com