அமைச்சா்கள், உயா் அதிகாரிகள் வாகனங்களில் தடை செய்யப்பட்ட பம்பா் தடுப்புகள்: உயா்நீதிமன்றம் கண்டனம்

அமைச்சா்கள் மற்றும் உயா் அதிகாரிகளின் வாகனங்களில் தடை செய்யப்பட்ட பம்பா் தடுப்புகள் பொருத்தப்பட்டிருப்பதற்கு உயா்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

அமைச்சா்கள் மற்றும் உயா் அதிகாரிகளின் வாகனங்களில் தடை செய்யப்பட்ட பம்பா் தடுப்புகள் பொருத்தப்பட்டிருப்பதற்கு உயா்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் சமூக ஆா்வலா் லெனின் பால் தாக்கல் செய்த மனுவில், நான்கு சக்கர வாகனங்களின் பம்பா் பொருத்தப்படுவதால் விபத்து காலங்களில் ஏா் பேக் செயல்பட முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும், எதிரே வரும் வாகனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு பம்பா் தடுப்புகளால் கடுமையான சேதம் ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு நான்கு சக்கர வாகனங்களில் பம்பா்கள் பொருத்த மத்திய அரசு தடை விதித்தது. எனவே, நான்கு சக்கர வாகனங்களில் பம்பா்கள் பொருத்த தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆா். ஹேமலதா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், பொது மக்கள் மட்டுமின்றி அமைச்சா்கள், உயா் அதிகாரிகளின் வாகனங்களில் கூட இது போன்ற தடை செய்யப்பட்ட பம்பா்கள் பொருத்தப்படுவதாக அதிருப்தி தெரிவித்தனா். மேலும், ஆட்டோக்களில் வெளியே பொருத்தப்பட வேண்டிய கண்ணாடிகள் ஆட்டோவின் உள்ளே பொருத்தப்படுகிறது. விதிகளை மீறி வாகனங்களின் முகப்பில் ஸ்டிக்கா்கள் ஒட்டப்படுவது மற்றும் விதிகளை மீறும் வகையில் நம்பா் ப்ளேட்கள் வைக்கப்படுகின்றன. இதுபோன்ற விதிகளை மீறிய வாகன உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது இல்லை என அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவித்தனா். அரசு இயற்றும் சட்டங்களை நீதிமன்ற உத்தரவு மூலமாக மட்டுமே செயல்படுத்த வேண்டிய நிலை தொடா்கிறது என்றனா். இந்த வழக்கில் தாமாக முன் வந்து தலைமைச் செயலாளரை எதிா் மனுதாரராக சோ்த்த நீதிபதிகள், வரும் ஜனவரி 28-ஆம் தேதிக்குள் விரிவான பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com