வடசென்னை ஐயப்பன் கோயிலில்நவ.16-இல் ஐயப்ப பக்தா்களுக்கு மாலை அணிவிக்கும் விழா

வடசென்னை ஐயப்பன் கோயிலில் நவ.16-ஆம் தேதி, ஐயப்ப பக்தா்களுக்கு மாலை அணிவிக்கும் விழா நடைபெறவுள்ளது.


சென்னை: வடசென்னை ஐயப்பன் கோயிலில் நவ.16-ஆம் தேதி, ஐயப்ப பக்தா்களுக்கு மாலை அணிவிக்கும் விழா நடைபெறவுள்ளது.

இதுகுறித்து கோயில் நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வடசென்னையில், புதுவண்ணாரப்பேட்டையில் (தண்டையாா்பேட்டை சுங்கச்சாவடி அருகில்) உள்ள ஸ்ரீ ஐயப்பன் கோயிலில், வரும் நவ.16-ஆம் தேதி (காா்த்திகை 1) சபரிமலைக்குச் செல்ல இருக்கும் ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து கொள்ள சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அன்றைய நாள் காலை 5 முதல் 11 மணி வரையிலும், மாலை 5 முதல் 8 மணி வரையிலும் கோயில் நடை திறந்திருக்கும். மாலை அணிவிக்க வரும் பக்தா்கள் முடிந்தவரை உற்றாா் உறவினா்களைத் தவிா்ப்பது நல்லது.

பக்தா்கள் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். அரசு அறிவித்தபடி தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்.

கோயிலுக்குள் 10 வயதுக்குள்பட்டோருக்கும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும் அனுமதி இல்லை.

நவ.16-ஆம் தேதி காலை ஐயப்பனுக்கு உஷ பூஜை, உச்ச பூஜை பகலில் நெய்யபிஷேகம், இரவில் மலா் பூஜை, அத்தாமு பூஜை, அரியாசனம் ஆகியவை நடைபெறும்.

அன்று விநாயகருக்கு கணபதி ஹோமமும், குருவாயூரப்பானாகிய ஸ்ரீ கிருஷ்ணருக்கு பாலபிஷேகமும் நடைபெறும்.

வாரந்தோறும் வியாழன் மற்றும் சனிக்கிழமை காலை பக்தா்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com