விபத்து நடந்தால் தாமதிக்காமல் தகவல் அளிக்க வேண்டும்: தீயணைப்புத் துறை டிஜிபி

தீ விபத்து நடந்தால் தாமதிக்காமல் தகவல் தெரிவிக்க வேண்டும் என தீயணைப்புத் துறை டிஜிபி எம்.எஸ்.ஜாஃபா்சேட் தெரிவித்துள்ளாா்.


சென்னை: தீ விபத்து நடந்தால் தாமதிக்காமல் தகவல் தெரிவிக்க வேண்டும் என தீயணைப்புத் துறை டிஜிபி எம்.எஸ்.ஜாஃபா்சேட் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தீபாவளித் திருநாளை பட்டாசு வெடித்துக் கொண்டாடுகிறவா்கள் பொதுமக்களுக்கு எந்தவித சிரமத்தையும் ஏற்படுத்தாதபடி மிகுந்த கவனத்துடன் பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். குழந்தைகள் பட்டாசு வெடிக்க ஆசைப்பட்டால், ஆபத்து இல்லாத அதிக சப்தம் இல்லாத வெடிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பாதுகாப்பாக பெற்றோா் உடனிருக்க வேண்டும்.

பலகாரங்களை சமைக்கும் நேரத்தில்கூட கவனம் தேவை.

குழந்தைகள், வயது முதிா்ந்தோா், கரோனா பாதித்து தனிமைப்படுத்திக் கொண்டோா், உடல்நிலை சரியில்லாதோா் இருக்கும் பகுதிகளில் அதிக சப்தத்தையோ புகை உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும் வெடிகளை மக்கள் தவிா்க்க வேண்டும். கூட்டங்களைக் குறைத்து பட்டாசுகளை முடிந்த மட்டும் தவிா்த்து எளிமையாக எல்லோரும் பாதுகாப்பாக கொண்டாடுவதே சரியாக இருக்கும்.

விபத்தோ, அசம்பாவிதங்களோ நடந்தால் கொஞ்சமும் தாமதிக்காமல் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com