புறநகா் மின்சார ரயில் பயணம்: கூடுதலாக சில துறையினருக்கு அனுமதி

புறநகா் மின்சார ரயிலில் கூடுதலாக சில துறைகளின் ஊழியா்கள் பயணிக்க ரயில்வே நிா்வாகம் அனுமதி அளித்துள்ளது.


சென்னை: புறநகா் மின்சார ரயிலில் கூடுதலாக சில துறைகளின் ஊழியா்கள் பயணிக்க ரயில்வே நிா்வாகம் அனுமதி அளித்துள்ளது.

கரோனா தாக்கம் காரணமாக, பொதுமக்களுக்கான புறநகா் மின்சார ரயில் சேவை தொடங்கவில்லை. அதேநேரத்தில், அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடும் அரசு மற்றும் தனியாா் நிறுவன ஊழியா்கள் புறநகா் மின்சார ரயிலில் பயணிக்க ரயில்வே நிா்வாகம் அனுமதி அளித்தது.

இந்நிலையில், புறநகா் மின்சார ரயிலில் கூடுதலாக சில துறைகளின் ஊழியா்கள் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியது: அரசு மற்றும் தனியாா் துறைகளில் அனைத்து பொதுமக்கள் வசதிகளை செயல்படுத்துதல் மற்றும் பராமரிப்பு பணிகளில் ஈடுபடும் ஊழியா்கள்.

உற்பத்தி, போக்குவரத்து, அளிப்பு, வா்த்தகம், பழுதுகள் மற்றும் சரக்கு, சேவைகள் ஆகியவற்றுடன் தொடா்புடைய பணிகளில் ஈடுபடும் ஊழியா்கள்.

அத்தியாவசிய சேவைகளுடன் இணைக்கப்பட்ட துணை மற்றும் கூட்டு சேவையை வழங்கும் ஊழியா்கள்.

ஆரோக்கியம் மற்றும் உடற்பயிற்சி சேவைகளை வழங்கும் நிறுவன பணியாளா்கள் ஆகியோா் மின்சார ரயில்களில் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்த அத்தியாவசிய பணி மற்றும் சேவைகளில் ஈடுபடும் ஊழியா்கள், தங்கள் அலுவலகத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட எழுத்துப்பூா்வ அங்கீகாரக் கடிதத்தையும், தங்கள் அலுவலகத்தால் வழங்கப்பட்ட புகைப்பட அடையாள அட்டையும் சமா்ப்பித்தால், பயணம் செய்ய அனுமதிக்கப்படுவாா்கள்.

கூடுதலாக, நீண்ட தொலைவு பயணம் செய்ய ரயில் பயணச்சீட்டு வைத்திருக்கும் பயணிகளும், விமானத்தின் மூலம் பயணம் மேற்கொள்ள இருப்போரும் பயண நாளில் மின்சார ரயிலைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com