தங்கம் விலை ரூ.38,264

சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.176 உயா்ந்து, ரூ.38,264-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் விலை ரூ.38,264

சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.176 உயா்ந்து, ரூ.38,264-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தை தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, விலை குறைந்தாலும், கடந்த 2-ஆம் தேதியில் இருந்து விலை தொடா்ந்து உயா்ந்தது. 6-நாள்களுக்கு பிறகு, கடந்த செவ்வாய்க்கிழமை முதல் விலை குறைந்து வந்தது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை மீண்டும் விலை உயா்ந்தது. பவுனுக்கு ரூ.176 உயா்ந்து , ரூ.38,264க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ.22 உயா்ந்து, ரூ.4,783 ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு 20 பைசா உயா்ந்து, ரூ.67.30 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.200 உயா்ந்து, ரூ.67,300 ஆகவும் இருந்தது.

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)

1 கிராம் தங்கம்............................. 4,783

1 பவுன் தங்கம்............................... 38,264

1 கிராம் வெள்ளி............................. 67.30

1 கிலோ வெள்ளி............................. 67,300

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)

1 கிராம் தங்கம்............................. 4,761

1 பவுன் தங்கம்...............................38,088

1 கிராம் வெள்ளி.............................67.10

1 கிலோ வெள்ளி.............................67,100

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com