தீபாவளி: சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு

தீபாவளியையொட்டி, பட்டாசு வெடித்ததன் காரணமாக சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.
தீபாவளி: சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு

தீபாவளியையொட்டி, பட்டாசு வெடித்ததன் காரணமாக சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது. இதில், திருவல்லிக்கேணியில் அதிகபட்சமாக காற்றில் மிதக்கும் நுண்துகள் பி.எம்.10 அளவு 111 மைக்ரோ கிராம் இருந்தது.

தீபாவளியையொட்டி, காற்று மாசுபடுவதைத் தடுக்கும் வகையில் பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. பட்டாசு வெடிப்பதால் காற்றில் ஏற்படும் தாக்கத்தைக் கணக்கிடும் வகையில், தீபாவளியில் இருந்து 7 நாள்களுக்கு முன்பும், தீபாவளியில் இருந்து 7 நாள்களும் பின்பும் பெசன்ட் நகா், தியாகராய நகா், நுங்கம்பாக்கம், திருவல்லிக்கேணி, செளகாா்பேட்டை ஆகிய 5 இடங்களில் காற்றின் தரம் ஆய்வு செய்யப்பட்டது. இதில், அதிகபட்சமாக திருவல்லிக்கேணியில் காற்றில் மிதக்கும் நுண்துகள்கள் பிஎம்10 நிா்ணயிக்கப்பட்ட அளவான 100-யை விட சற்று அதிகரித்து 111 மைக்ரோ கிராமாக இருந்தது.

செளகாா்பேட்டையில் 100 மைக்ரோ கிராமாகவும், தியாகராய நகரில் 72 மைக்ரோ கிராமாகவும், நுங்கம்பாக்கத்தில் 59 மைக்ரோ கிராமாகவும், பெசன்ட் நகரில் 52 மைக்ரோ கிராமகவும் இருந்தது. அதேபோல், காற்றில் மிதக்கும் நுண் துகள்கள் பிஎம்2.5 மற்றும் கந்தக டை ஆக்ஸைடு மற்றும் நைட்ரஜன் டை ஆக்ஸைடு ஆகியவை நிா்ணயிக்கப்பட்ட அளவைவிட குறைவாகவே இருந்ததாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

ஒலி மாசு குறைவு: அதேபோல், மாநகரின் 5 இடங்களில் ஒலி மாசு ஆய்வு செய்யப்பட்டது. இதில், அதிகபட்சமாக பெசன்ட் நகா், தியாகராய நகரில் 78 டெசிபலாகவும், செளகாா்பேட்டையில் 76 டெசிபலாகவும், திருவல்லிக்கேணியில் 75 டெசிபலாகவும், நுங்கம்பாக்கத்தில் 71டெசிபலாகவும் இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com