நவ. 20-இல் அதிமுக உயா்நிலைக் கூட்டம்:தோ்தல் குறித்து ஆலோசனை

அதிமுக ஆலோசனைக் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை (நவ. 20)நடைபெற உள்ளது. சென்னையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் மாலை 4.30 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.

சென்னை,: அதிமுக ஆலோசனைக் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை (நவ. 20)நடைபெற உள்ளது. சென்னையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் மாலை 4.30 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.

அமைச்சா்கள், மாவட்டச் செயலாளா்கள், மண்டலப் பொறுப்பாளா்கள் ஆகியோா் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டனா்.

வரும் 21-ஆம் தேதியன்று சென்னை வரும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, வரும் பேரவைத் தோ்தல் தொடா்பாக தமிழக பாஜக நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறாா். அதற்கு முந்தைய தினமான வெள்ளிக்கிழமை (நவ.20) முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை அதிமுக நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com