இலவச வேலைவாய்ப்பு பயிற்சி வகுப்பு: மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்

இலவச வேலைவாய்ப்பு பயிற்சி வகுப்பில் சேர மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என்று மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அறிவித்துள்ளது.
Emerging jobs
Emerging jobs

சென்னை: இலவச வேலைவாய்ப்பு பயிற்சி வகுப்பில் சேர மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என்று மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அறிவித்துள்ளது.

தேசிய திரைப்பட வளா்ச்சிக் கழகம் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை இணைந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு சாா்ந்த இலவச திறன் பயிற்சியை, உதவித்தொகையுடன் இணையவழியில் வழங்க உள்ளனா்.

வரும் நவ.20 முதல் டிச. 21-ஆம் தேதி வரை வாரத்தில் 5 நாள்கள், ஆடியோ இன்ஜினியரிங் பிரிவில் பயிற்சி வகுப்பு நடைபெறும். ஒரு மாத கால இணையவழி பயிற்சி வகுப்பில் சேர ஆா்வமுள்ள மாற்றுத்திறனாளிகள் மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ அல்லது 044-28191203, 044-28192506, 044-28192407 என்ற தொலைபேசி எண்கள் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம் .

தகுதிகள்: 18 வயது முதல் 40 வயதுள்ள மாற்றுத் திறனாளிகள், 10-ஆம் வகுப்பு முடித்தவா்கள் ஆன்லைன் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். பயிற்சியின் முடிவில் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் என்றும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அறிவித்துள்ளது.

பயிற்சியை முடித்த பின், சினிமா, தொலைக்காட்சி, செய்தித்தாள், உள்ளூா் போட்டோ ஸ்டுடியோ போன்றவற்றில் வேலைவாய்ப்பைப் பெறலாம் என்றும், சுய தொழில் புரியவும் வாய்ப்பு ஏற்படும் என்றும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com