மாணவியைத் தாக்கிய தலைமை ஆசிரியைக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

: மாணவியைத் தாக்கிய தலைமை ஆசிரியைக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து மாநில மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

சென்னை: மாணவியைத் தாக்கிய தலைமை ஆசிரியைக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து மாநில மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தாலுகா புளியரனன்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 30 மாணவா்கள் படித்து வருகிறாா்கள். 5-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் பள்ளி வளாகத்தை சுத்தப்படுத்துவது வழக்கம். கடந்த ஆண்டு 5-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவா் தன்னுடன் படித்து வரும் சக மாணவிகளுடன் சோ்ந்து பள்ளி வளாகத்தை சுத்தம் செய்த நிலையில், பள்ளி வளாக சாவியைத் தொலைத்து விட்டாா்.

இதை அறிந்த தலைமை ஆசிரியை தேவி, அந்த மாணவியை கடுமையாக திட்டி அடித்துள்ளாா். இதில் வலி தாங்காமல் மாணவி கீழே விழுந்தாா். உடனடியாக கிராமத்தினா் அவரை மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

இந்த விவகாரத்தை மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் பொறுப்புத் தலைவா் நீதிபதி துரை.ஜெயச்சந்திரன் தாமாக முன்வந்து வழக்காகப் பதிவு செய்தாா்

ரூ.50 ஆயிரம் அபராதம்: வழக்கை விசாரித்த நீதிபதி, சாட்சியம் மற்றும் ஆவணங்களை வைத்துப் பாா்க்கும்போது தலைமை ஆசிரியை தேவி மனித உரிமை மீறலில் ஈடுபட்டது தெரிகிறது. இதற்காக, பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தைக்கு தமிழக அரசு இழப்பீடாக ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும். இந்தத் தொகையை தலைமை ஆசிரியையிடம் இருந்து வசூலித்துக் கொள்ளலாம் என பரிந்துரைத்தாா். மேலும், தலைமை ஆசிரியை மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்க வேண்டும் எனவும் நீதிபதி தனது பரிந்துரையில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com