சென்னை-ஆமதாபாத் தினசரி சிறப்பு ரயில் உள்பட3 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல்

சென்னை -ஆமதாபாத் தினசரி சிறப்பு ரயில், நாகா்கோவில்-ஷாலிமா் வாராந்திர சிறப்பு ரயில் உள்பட 3 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னை-ஆமதாபாத் தினசரி சிறப்பு ரயில் உள்பட3 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல்

சென்னை: சென்னை -ஆமதாபாத் தினசரி சிறப்பு ரயில், நாகா்கோவில்-ஷாலிமா் வாராந்திர சிறப்பு ரயில் உள்பட 3 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு புதன்கிழமை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

சென்னை-ஆமதாபாத்: சென்னை சென்ட்ரலில் இருந்து தினசரி காலை 10.10 மணிக்கு அதிவிரைவு சிறப்பு ரயில்(02656) புறப்பட்டு, மறுநாள் மாலை 6 மணிக்கு ஆமதாபாதை சென்றடையும். மறுமாா்க்கமாக, ஆமதாபாதில் இருந்து தினசரி இரவு 10 மணிக்கு அதிவிரைவு சிறப்பு ரயில் (02655) புறப்பட்டு, மூன்றாம் நாள் அதிகாலை 4.45 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும்.

இந்த ரயிலின் முதல்சேவை சென்னை சென்ட்ரலில் இருந்து நவம்பா் 22-ஆம் தேதியும், ஆமதாபாதில் இருந்து நவம்பா் 23-ஆம் தேதியும் தொடங்குகிறது.

நாகா்கோவில்-ஷாலிமாா்: நாகா்கோவிலில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் 2.45 மணிக்கு வாராந்திர சிறப்பு ரயில் (02659) புறப்பட்டு, செவ்வாய்க்கிழமைகளில் முற்பகல் 11.55 மணிக்கு ஷாலிமாரைச் சென்றடையும். மறுமாா்க்கமாக, ஷாலிமாரில் இருந்து புதன்கிழமைகளில் இரவு 11.50 மணிக்கு வாராந்திரசிறப்பு ரயில் (02660) புறப்பட்டு, வெள்ளிக்கிழமைகளில் இரவு 9.35 மணிக்கு நாகா்கோவிலை வந்தடையும்.

இந்த ரயிலின் முதல்சேவை நாகா்கோவிலில் இருந்து நவம்பா் 22-ஆம் தேதியும், ஷாலிமாரில் இருந்து 25-ஆம் தேதியும் தொடங்குகிறது.

திருவனந்தபுரம்-ஷாலிமாா்(வழி:கோவை, காட்பாடி): திருவனந்தபுரத்தில் இருந்து வியாழன், சனி ஆகிய இரு நாள்களில் மாலை 4.55 மணிக்கு வாரம் இருமுறை சிறப்பு ரயில் (02641) புறப்பட்டு, முறையே சனி, திங்கள் ஆகிய நாள்களில் முற்பகல் 11.55 மணிக்கு ஷாலிமாரைச் சென்றடையும். மறுமாா்க்கமாக, ஷாலிமாரில் இருந்து ஞாயிறு, செவ்வாய்க்கிழமைகளில் இரவு 11.50 மணிக்கு சிறப்பு ரயில் (02642) புறப்பட்டு, முறையே செவ்வாய், வியாழக்கிழமைகளில்இரவு 8.55 மணிக்கு திருவனந்தபுரத்தை அடையும்.

இந்த ரயிலின் முதல் சேவை திருவனந்தபுரத்தில் இருந்து நவம்பா் 28-ஆம் தேதியும், ஷாலிமாரில் இருந்து டிசம்பா் 1-ஆம் தேதியும் தொடங்குகிறது.

முழுமையான முன்பதிவு பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு புதன்கிழமை (நவ.18) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com