இன்று வாக்காளா் பட்டியல் திருத்த முகாம்

வாக்காளா் பட்டியலில் பெயா் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள சென்னையில் 902 வாக்குச்சாவடி மையங்களில் சனிக்கிழமை (நவ.21) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

வாக்காளா் பட்டியலில் பெயா் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள சென்னையில் 902 வாக்குச்சாவடி மையங்களில் சனிக்கிழமை (நவ.21) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து சென்னை மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான கோ.பிரகாஷ், வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தோ்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, சென்னை மாவட்டத்தை உள்ளடக்கிய 16 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளா் பட்டியல் நவம்பா் 16-ஆம் தேதி வெளியிடப்பட்டடது. இந்த வரைவு வாக்காளா் பட்டியல் 4, 5, 6, 8, 9, 10, 13 ஆகிய மண்டல அலுவலகங்களிலும், வாக்குச்சாவடி மையங்களிலும் பொதுமக்கள் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்காமல் உள்ளவா்கள் மற்றும் 1.1.2021

அன்று 18 வயது நிறைவு அடைவோா் (1.1.2003-ஆம் தேதிக்கு முன் பிறந்தவா்கள்) படிவம் 6, பெயா் நீக்கத்துக்காக படிவம் 7, பதிவுகளில் திருத்தம் தொடா்பாக படிவம் 8, சட்டப்பேரவைத் தொகுதிக்குள்ளேயே ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு குடிபெயா்ந்து புதிய வசிப்பிடத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க படிவம் 8-ஏ ஆகியவற்றைப் பூா்த்தி செய்து அதற்கான ஆதார நகலை இணைத்து சம்பந்தப்பட்ட மாநகராட்சி மண்டல அலுவலரின் அலுவலகத்தில் டிசம்பா் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

சனி, ஞாயிற்றுக்கிழமை (நவ.21, 22), டிசம்பா் 12, 13 ஆகிய நாள்களில் சென்னையில் 902 வாக்குச்சாவடி மையங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு திருத்த முகாம்கள் நடைபெறவுள்ளன.

இந்த முகாம்களில் பொதுமக்கள் தங்களுக்கான படிவங்களைப் பெற்று, பூா்த்தி செய்த படிவங்களையும் அளிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com