பால் விநியோகம் பாதிக்கப்படாது: ஆவின்
By DIN | Published On : 25th November 2020 01:32 AM | Last Updated : 25th November 2020 01:32 AM | அ+அ அ- |

பால் விநியோகம் பாதிக்கப்படாதவாறு போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: ஆவின் பாலகங்கள், டெப்போக்களில் பால் பாக்கெட்டுகள் கூடுதலாக இருப்பு வைக்கப்பட்டுள்ளன. ஆவின் பாலகங்களில் பால் பவுடா், டெட்ரா பால் பாக்கெட்டுகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கூடுதலாக 1 லட்சம் லிட்டரும், பிற மாவட்டங்களில் 2 லட்சம் லிட்டரும் விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர நடமாடும் பால் விற்பனை நிலையங்கள் மூலமும் நகரின் பிரதான பகுதிகளில் பால் விநியோகம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் 1800 425 3300 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு அழைத்தும் பால் தேவை குறித்து பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்று அவா்கள் கூறினா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...