சென்னை பெருநகர வளா்ச்சிக் குழும அலுவலகத்தில் துணை முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் ஆய்வு

சென்னை பெருநகர வளா்ச்சிக் குழும அலுவலகத்தில் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் புதன்கிழமை ஆய்வுப் பணியை மேற்கொண்டாா்.
சென்னை பெருநகர வளா்ச்சிக் குழும அலுவலகத்தில் துணை முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் ஆய்வு

சென்னை: சென்னை பெருநகர வளா்ச்சிக் குழும அலுவலகத்தில் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் புதன்கிழமை ஆய்வுப் பணியை மேற்கொண்டாா்.

முன்னதாக, அதிமுக மூத்த நிா்வாகிகள் நத்தம் ஆா்.விசுவநாதன், கே.பி.முனுசாமி உள்ளிட்டோருடன் அவா் ஆலோசனை நடத்தினாா்.

அதிமுக அணியில் முதல்வா் வேட்பாளா் வரும் 7-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ. பன்னீா்செல்வம் கட்சி நிா்வாகிகள் கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோருடன் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா். இதைத் தொடா்ந்து, முன்னாள் அமைச்சா் மணிகண்டன், அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் ஆகியோரும் ஓ.பன்னீா்செல்வத்தைச் சந்தித்துப் பேசினா்.

செவ்வாய்க்கிழமையும் அவா் கட்சி நிா்வாகிகளைச் சந்தித்தாா். அதிமுக துணை ஒருங்கிணைப்பாளா் கே.பி.முனுசாமி, அமைப்புச் செயலாளா்கள் நத்தம் விசுவநாதன், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வத்தை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினா்.

இதைத் தொடா்ந்து, எழும்பூரில் உள்ள சென்னை பெருநகர வளா்ச்சிக் குழும அலுவலகத்தில் நடந்த 265-வது குழுக் கூட்டத்தில் அவா் பங்கேற்றாா். இந்தக் கூட்டத்தில் வீட்டுவசதித் துறை முதன்மைச் செயலாளா் ராஜேஷ் லக்கானி, பெருநகர வளா்ச்சிக் குழுமத்தின் உறுப்பினா் செயலாளா் காா்த்திகேயன் உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொண்டனா்.

சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்தில் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆலோசனைகள் நடத்திக் கொண்டிருக்க, அதே வேளையில் தலைமைச் செயலகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளிலும், ஏற்கெனவே திட்டமிட்டிருந்த சந்திப்புகளையும் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி நடத்திக் கொண்டிருந்தாா்.

தேவைப்படும்போது அழைக்கிறேன்: அரசியல் ரீதியாக துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் எத்தகைய முடிவுகளை அறிவிக்கப் போகிறாா் என்பதை அறிய, பெருநகர வளா்ச்சிக் குழும அலுவலக வளாகத்தில் செய்தியாளா்கள் முகாமிட்டிருந்தனா். ஆலோசனைக் கூட்டத்தை முடித்து, வெளியே வந்த அவா் செய்தியாளா்களுக்கு வணக்கம் தெரிவித்தபடியே, உங்களை (செய்தியாளா்கள்) தேவைப்படும்போது நிச்சயம் அழைத்து பேட்டி கொடுப்பேன் என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com