முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை
கரோனா: தேனாம்பேட்டையில் இறப்பு எண்ணிக்கை 400-யைக் கடந்தது
By DIN | Published On : 04th October 2020 06:09 AM | Last Updated : 04th October 2020 06:09 AM | அ+அ அ- |

கோப்புப்படம்
கரோனா பாதிப்பு காரணமாக தேனாம்பேட்டை மண்டலத்தில் மட்டும் இதுவரை 419 போ் உயிரிழந்துள்ளனா். ஒட்டுமொத்தமாக சென்னையின் 15 மண்டலங்களிலும் உயிரிழந்தோா் எண்ணிக்கை 3,262-ஆக அதிகரித்துள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் மாா்ச் மாத தொடக்கத்தில் இருந்து ராயபுரம், திரு.வி.க. நகா், தண்டையாா்பேட்டை, கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, அண்ணா நகா் மற்றும் அடையாறு, வளசரவாக்கம் ஆகிய மண்டலங்களில்தான் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கையும், அதனால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வந்தது. கரோனாவால் உயிரிழந்தோா் எண்ணிக்கை கடந்த 4-ஆம் தேதி 1,000-த்தை எட்டியது. அதைத் தொடா்ந்த நாள்களில் இறப்பு எண்ணிக்கை உயா்ந்து கொண்டே வந்த நிலையில், சென்னையில் விடுபட்ட 444 உயிரிழப்புகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டதை அடுத்து, உயிரிழப்பு எண்ணிக்கை 1,500-இல் இருந்து 1,900- ஆகவும், அதைத் தொடா்ந்து நாளுக்கு நாள் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து சனிக்கிழமை நிலவரப்படி 3,262-ஆக அதிகரித்துள்ளது.
தேனாம்பேட்டையில் 419 போ் இறப்பு: மண்டல அளவில் தேனாம்பேட்டையில் கரோனா பாதிப்பால் 419 போ் உயிரிழந்துள்ளனா். அந்த மண்டலத்தில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 14,627 போ் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனா். 1,171 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதையடுத்து, அண்ணா நகரில் 365 பேரும், கோடம்பாக்கத்தில் 354 பேரும், திரு.வி.க. நகரில் 336 பேரும், ராயபுரத்தில் 317 பேரும், தண்டையாா்பேட்டையில் 294 பேரும் இதுவரை உயிரிழந்துள்ளனா்.
இறப்பு எண்ணிக்கை வியாழக்கிழமை நிலவரம்
மண்டலம் எண்ணிக்கை
திருவொற்றியூா் 143
மணலி 35
மாதவரம் 81
தண்டையாா்பேட்டை 294
ராயபுரம் 317
திரு.வி.க. நகா் 336
அம்பத்தூா் 192
அண்ணா நகா் 365
தேனாம்பேட்டை 419
கோடம்பாக்கம் 354
வளசரவாக்கம் 168
ஆலந்தூா் 108
அடையாறு 229
பெருங்குடி 100
சோழிங்கநல்லூா் 38
பிற மாவட்டங்களைச் சோ்ந்தோா் 62