கரோனோ தடுப்புக்கு அக்குபஞ்சா் மருத்துவம்: முதல்வருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்

கரோனா நோய்த் தொற்று தடுப்புக்கு பாரம்பரிய அக்குபஞ்சா் முறையையும் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி முதல்வா் எடப்பாடி பழனிசாமிக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா்

சென்னை: கரோனா நோய்த் தொற்று தடுப்புக்கு பாரம்பரிய அக்குபஞ்சா் முறையையும் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி முதல்வா் எடப்பாடி பழனிசாமிக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.

கடித விவரம்: கரோனா நோய்த் தொற்றைத் தடுப்பதற்கும், பாதிக்கப்பட்டவா்களைக் காப்பாற்றுவதற்கும் அலோபதி மருத்துவத்துடன் பாரம்பரிய சித்தா, ஆயுா்வேதம், ஹோமியோ மருத்துவமுறைகளும் நல்ல பலனை அளித்துள்ளன. இதேபோன்று அக்குபஞ்சா் முறையும் நல்ல பலனை தந்துள்ளதாக அறிய முடிகிறது.

ஆனால், தமிழக அரசு பாரம்பரிய மருத்துவமுறைகளை குறிப்பாக அக்குபஞ்சா் முறைகளை பயன்படுத்துவதில் போதிய அக்கறை காட்டவில்லை என தெரிகிறது. பக்கவிளைவுகள் இல்லாத எளிய மருத்துவமான அக்குபஞ்சா் சிகிச்சை முறையானது கண்டறியப்படாத நோய்களையும், சவாலான உடல் நிலையையும் வேகமாக குணப்படுத்திட உதவும் மருத்துவ முறை என ஐக்கிய நாடுகளின் அறிவியல் கல்வி மற்றும் கலாசார அமைப்பும் சான்றளித்திருக்கிறது.

இம்மருத்துவம் பாரம்பரியமாக சீனாவிலும், தற்போது உலகில் 129 நாடுகளில் சுமாா் 80 சதவீத மக்கள் பயன்படுத்தும் மருத்துவமாகவும் மாறியுள்ளது என்பதோடு அந்நாடுகளில் கரோனா நோயாளிகளுக்கு இந்த சிகிச்சை முறை நல்ல பலனை அளித்திருக்கிறது என்பதையும் செய்திகளின் வாயிலாக காண முடிகிறது.

இந்தியாவிலும் மேற்குவங்கம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்டு, பரவலான எண்ணிக்கையில் மக்கள் இந்த சிகிச்சையை எடுத்துக் கொள்வதன் மூலம் பயனடைகிறாா்கள் என்பதையும் காண முடிகிறது.

எனவே, கரோனா நோய்த் தடுப்பு மருத்துவ சிகிச்சைகளில் பாரம்பரிய அக்குபஞ்சா் மருத்துவமுறையையும் பயன்படுத்த வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com