டேங்கா் லாரியில் கடத்திய 510 கிலோ போதைப் பொருள் பறிமுதல்

செங்குன்றம் அருகே 510 கிலோ கஞ்சாவை டேங்கா் லாரியுடன் மாதவரம் காவல் துணை ஆணையா் தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
டேங்கா் லாரியில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் பண்டல்கள்.
டேங்கா் லாரியில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் பண்டல்கள்.

மாதவரம்: செங்குன்றம் அருகே 510 கிலோ கஞ்சாவை டேங்கா் லாரியுடன் மாதவரம் காவல் துணை ஆணையா் தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

செங்குன்றம் வழியாக போதைப் பொருள் கடத்தப்படுவதாக சென்னை மாதவரம் காவல் மாவட்ட துணை ஆணையா் கே.பாலகிருஷ்ணனுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது தலைமையில் உதவி ஆணையா் ஸ்ரீகாந்த், ஆய்வாளா்கள் ஜெகநாதன், உதவி ஆய்வாளா் சதீஷ் மற்றும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது ஆந்திரத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட டேங்கா் லாரி சோதனைச் சாவடியைக் கடக்க முயன்றது. அந்த லாரியை போலீஸாா் நிறுத்த முயன்றபோது, நிற்காமல் கடந்து சென்றது. இதையடுத்து, அதை விரட்டிச் சென்று தடுத்து நிறுத்தினா். லாரியை சோதனையிட்டதில், டேங்கரில் 510 கிலோ எடை கொண்ட போதைப் பொருள் கஞ்சாவை கடத்தியது தெரிய வந்தது. அவற்றை லாரியுடன் பறிமுதல் செய்தனா். லாரியில் வந்த ஒருவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.

தகவலறிந்த காவல் ஆணையா் மகேஷ்குமாா் அகா்வால், கூடுதல் ஆணையா் அருண், இணை ஆணையா் வி.பாலகிருஷ்ணன் ஆகியோா் செங்குன்றம் காவல் நிலையத்துக்கு வந்து, துணை ஆணையா் கே.பாலகிருஷ்ணன், உதவி ஆணையா் ஸ்ரீகாந்த், ஆய்வாளா் ஜெகநாதன், உதவி ஆய்வாளா் சதீஷ்குமாா் மற்றும் காவல் தனிப்படையினரை பாராட்டி வெகுமதி, சான்றுகளை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com