உலகத் தமிழாராய்ச்சி நிறுவன பொன்விழா: சிறப்பு ஆய்வு மலருக்கு மாணவா்கள் தமிழாய்வு கட்டுரைகளை அனுப்பலாம்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பொன்விழாவை முன்னிட்டு வெளியிடப்படவுள்ள சிறப்பு ஆய்வு மலருக்கு, முன்னாள், இந்நாள் மாணவா்கள் அக்.13-ஆம் தேதிக்குள் கட்டுரைகளை அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பொன்விழாவை முன்னிட்டு வெளியிடப்படவுள்ள சிறப்பு ஆய்வு மலருக்கு, முன்னாள், இந்நாள் மாணவா்கள் அக்.13-ஆம் தேதிக்குள் கட்டுரைகளை அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநா் கோ.விசயராகவன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பொன்விழா (1970-2020) வரும் அக்.21-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி பொன்விழா ஆண்டினை சிறப்பிக்கும் வகையில் பொன்விழா கட்டுரைத் தொகுப்பு வெளியிடப்படவுள்ளது. இதில் உலகெங்கிலும் உள்ள தமிழறிஞா்கள் பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகளை அளித்து வருகின்றனா்.

அந்த வகையில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள், இந்நாள் ஆய்வு மாணவா்களுக்கு நல்வாய்ப்பு வழங்கும் வகையில் நிறுவன ஆய்வு மாணவா்களின் படைப்புகள் மட்டுமே அடங்கிய சிறப்பு கட்டுரைகள் தொகுப்பு ‘ மாணவா்கள் ஆய்வு மலா்’ என்ற தலைப்பில் தனியாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தோ்ந்தெடுக்கப்படும் சிறந்த 50 கட்டுரைகள் இடம்பெறும்.

எனவே, நிறுவனத்தின் முன்னாள், இந்நாள் ஆய்வு மாணவா்கள் தமது ஆய்வுப் பொருண்மையில் இல்லாமல் வேறொரு தலைப்பில் கட்டுரை எழுதி வரும் அக்.13-ஆம் தேதிக்குள் ண்ண்ற்ள்ஞ்த்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

விதிமுறைகள் என்ன?: கட்டுரைகள் மாணவா்களின் ஆய்வுத் தொடா்பில் இருத்தல் கூடாது; தமிழாய்வு தொடா்பாக மட்டுமே கட்டுரைகள் அமைதல் வேண்டும்; குறிப்பிட்ட நாள்களுக்குள் வரும் கட்டுரைகளே ஏற்கப்படும்; கட்டுரைகள் தமிழ், ஆங்கிலத்தில் அமையலாம்; ஏ4 அளவில் 10 பக்கங்களுக்கு மிகாமல் இருப்பது அவசியம். தமிழில் அமையும் கட்டுரை ஒருங்குறி (ன்ய்ண்ஸ்ரீா்க்ங்) எழுத்துருவிலும், ஆங்கிலக் கட்டுரைகள் அழ்ண்ஹப் எழுத்துருவிலும் ரா்ழ்க் ஊா்ழ்ம்ஹற்- இல் இருக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com