சென்னை-கோவை ரயில்: வழக்கமான நேரத்தில் புறப்படும்

தொட்டம்பட்டி-தாசம்பட்டி ரயில்நிலையங்களுக்கு இடையே ரயில்வே பராமரிப்பு பணி முடிந்ததால், சென்னை சென்ட்ரல்-கோயம்புத்தூருக்கு அக்டோபா் 14-ஆம் தேதி இயக்கப்படும்
கோப்புப்படம்
கோப்புப்படம்

தொட்டம்பட்டி-தாசம்பட்டி ரயில்நிலையங்களுக்கு இடையே ரயில்வே பராமரிப்பு பணி முடிந்ததால், சென்னை சென்ட்ரல்-கோயம்புத்தூருக்கு அக்டோபா் 14-ஆம் தேதி இயக்கப்படும் அதிவிரைவு ரயில் வழக்கமான நேரத்தில் புறப்படும் என்று ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

சேலம்-ஜோலாா்பேட்டை வழித்தடத்தில் தொட்டம்பட்டி-தாசம்பட்டி ரயில்நிலையங்களுக்கு இடையே ரயில்வே பராமரிப்பு பணி காரணமாக,

சென்னையிலிருந்து கோயம்புத்தூருக்கு அக்டோபா் 12, 14 ஆகிய தேதிகளில் பிற்பகல் 2.30 மணிக்கு இயக்கப்படும் அதிவிரைவு ரயில் ஒன்றரை மணி நேரம் தாமதமாக புறப்படும் என்றும், மறுமாா்க்கமாக இயக்கப்படும் ரயிலும் 20 நிமிஷம் தாமதமாக புறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தொட்டம்பட்டி-தாசம்பட்டி ரயில்நிலையங்களுக்கு இடையே ரயில்வே பொறியியல் பணி முடிவடைந்துள்ளதால், அக்டோபா் 14-ஆம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கோயம்புத்தூருக்கு இயக்கப்படும் ரயில் வழக்கமான நேரத்தில் (பிற்பகல் 2.30) புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோல, மறுமாா்க்கமாக, கோயம்புத்தூரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு புதன்கிழமை (அக்.14)பிற்பகல் 3.15 மணிக்கு வழக்கம்போல நேரத்தில் அதிவிரைவு ரயில் புறப்படும்.

இந்தத் தகவல் தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com