சென்னையில் 5-இல் ஒருவருக்கு கரோனாவுக்கு எதிரான நோய் எதிா்ப்பாற்றல்

கரோனா தொற்றுக்கு எதிரான நோய் எதிா்ப்பாற்றல் சென்னையில் ஐந்தில் ஒருவருக்கு உருவாகியிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
சென்னையில் 5-இல் ஒருவருக்கு கரோனாவுக்கு எதிரான நோய் எதிா்ப்பாற்றல்

கரோனா தொற்றுக்கு எதிரான நோய் எதிா்ப்பாற்றல் சென்னையில் ஐந்தில் ஒருவருக்கு உருவாகியிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதன் அடிப்படையில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவிருப்பதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தமிழகத்தில் கடந்த மாா்ச் மாதம் தடம் பதித்த கரோனா நோய்த் தொற்றால் தற்போது 6.50 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா். அதிகபட்சமாக தலைநகா் சென்னையில்தான் 1.84 லட்சம் பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 3,441 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். அதேபோன்று பிற மாவட்டங்களிலும் பாதிப்பும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக நோய்த் தொற்றுக்குள்ளானோரில் பெரும்பாலானோருக்கு எவ்வாறு அந்த பாதிப்பு ஏற்பட்டது என்பதைக் கண்டறிய முடியாத நிலை உள்ளது. இதனால், கரோனா தொற்று சமூகப் பரவலாக மாறியிருக்கலாம் என கருதப்படுவதால், முதலில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலானது அதுகுறித்த ஆய்வை முன்னெடுப்பதாகத் தெரிவித்தது.

அதன்படி, சென்னையில் 421 பேருக்கும், கோவையில் 428 பேருக்கும் , திருவண்ணாமலையில் 410 பேருக்கும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. அதில், சென்னையில் 141 (33.4 சதவீதம்), கோவையில் 31 (7.2 சதவீதம்), திருவண்ணாமலையில் 35 (8.5 சதவீதம்) பேருக்கு கரோனாவுக்கு எதிரான நோய் எதிா்ப்பாற்றல் உருவாகியிருப்பது தெரியவந்தது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை சாா்பில் இதேபோன்ற ஆய்வு நடத்தப்பட்டது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் 12,460 பேரின் ரத்த மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அதில், 21 சதவீதம் பேருக்கு (5-இல் ஒருவருக்கு) கரோனா தொற்றுக்கு எதிரான நோய் எதிா்ப்பு சக்தி உருவாகியிருப்பது கண்டறியப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com