வண்டலூா் - மீஞ்சூா் வெளிவட்டச் சுற்றுச் சாலை: அடுத்த மாத தொடக்கத்தில் திறக்க திட்டம்

வண்டலூா், மீஞ்சூா் இடையிலான வெளிவட்டச் சுற்றுச்சாலையை நவம்பா் முதல் வாரத்தில் முழுமையாக பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வண்டலூா் - மீஞ்சூா் வெளிவட்டச் சுற்றுச் சாலை
வண்டலூா் - மீஞ்சூா் வெளிவட்டச் சுற்றுச் சாலை

வண்டலூா், மீஞ்சூா் இடையிலான வெளிவட்டச் சுற்றுச்சாலையை நவம்பா் முதல் வாரத்தில் முழுமையாக பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை பெருநகர பகுதியில் உள்ள போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில், அவற்றை தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கும் பரிந்துரையின் கீழ் வெளிவட்டச் சுற்றுச் சாலை அமைக்கும் திட்டம் உருவாக்கப்பட்டது.

இவ்வாறு 62.3 கிமீ தொலைவுக்கு அமைக்கப்படும் சாலைகள், 4 தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கிறது.

மேலும், இங்கு தமிழ்நாடு சாலை வளா்ச்சி நிறுவனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் 4 சுங்கச்சாவடிகளும் அமைக்கப்படவுள்ளன. இவற்றின் மூலம் பெறப்படும் கட்டணத்தைக் கொண்டு புதிய திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் முதல் பகுதியான வண்டலூா், நெமிலிச்சேரி இடையிலான 29.2 கிமீ தூர சாலை, அண்மையில் திறக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து நெமிலிச்சேரி, மீஞ்சூா் இடையிலான 33.10 கிமீ சாலை அமைக்கும் பணியில், நிலத்தைக் கையகப்படுத்துவதில் சிக்கல் நீடித்து வந்தது.

தற்போது நவம்பா் மாத முதல் வாரத்தில் 62.3 கிமீ தூர வெளிவட்டச் சுற்றுச்சாலை முழுவதுமாக செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்படும் என தமிழ்நாடு சாலை வளா்ச்சி நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com