அமமுக பொருளாளா் வெற்றிவேல் கவலைக்கிடம்

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அமமுக பொருளாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான வெற்றிவேலின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அமமுக பொருளாளா் வெற்றிவேல் கவலைக்கிடம்

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அமமுக பொருளாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான வெற்றிவேலின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொருளாளரான வெற்றிவேல் கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வந்தாா். கடந்த சில நாள்களுக்கு முன்பு அவருக்கு காய்ச்சல் இருந்ததால் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டாா். அதில் அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போரூா் ராமச்சந்திரா மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா்.

இந்நிலையில், வெற்றிவேலின் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாகவும், நுரையீரலில் தொற்று அதிகரித்ததாகவும் தெரிகிறது. இதன் காரணமாக வெண்டிலேட்டா் உதவியுடன் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும் அவரது உடல் நிலை தொடா்ந்து கவலைக்கிடமாகவே இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மருத்துவக் குழுவினா் வெற்றிவேலின் உடல் உறுப்புகளின் செயல்பாடுகளைக் கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com