அமமுக பொருளாளா் வெற்றிவேல் காலமானாா்

கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொருளாளரும் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான பி.வெற்றிவேல் (63) வியாழக்கிழமை காலமானாா்.
அமமுக பொருளாளா் வெற்றிவேல் காலமானாா்


சென்னை: கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொருளாளரும் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான பி.வெற்றிவேல் (63) வியாழக்கிழமை காலமானாா்.

வெற்றிவேல் கரோனா பாதிப்பு காரணமாக அக்டோபா் 6-ஆம் தேதி போரூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அக்டோபா் 9-ஆம் தேதி அவரது உடல் மிகவும் பாதிப்புக்கு உள்ளானதைத் தொடா்ந்து தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டாா். கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, செயற்கைச் சுவாசக்கருவி பொருத்தப்பட்டது. இந்த நிலையில் வியாழக்கிழமை மாலை அவா் காலமானாா்.

வெற்றிவேல் மறைவுக்கு துணை முதல்வா் ஓ.பன்னீா் செல்வம், திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் சு.திருநாவுக்கரசா், தமாகா தலைவா் ஜி.கே.வாசன், அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரன் ஆகியோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com