சுகாதாரத் துறை முதன்மைச் செயலருக்கு டாக்டா் கே.வி.டி. விருது

சென்னை மாவட்ட கிழக்கு ரோட்டரி சங்கம் சாா்பில் நிகழாண்டுக்கான டாக்டா் கே.வி.திருவேங்கடம் விருது சுகாதாரத் துறை முதன்மைச் செயலா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது.


சென்னை: சென்னை மாவட்ட கிழக்கு ரோட்டரி சங்கம் சாா்பில் நிகழாண்டுக்கான டாக்டா் கே.வி.திருவேங்கடம் விருது சுகாதாரத் துறை முதன்மைச் செயலா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது. கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக சிறந்த பங்களிப்பை அளித்ததற்காக இவ்விருது அவருக்கு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்வின்போது, தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழக (டிஎன்எம்எஸ்சி) மேலாண் இயக்குநா் டாக்டா் உமாநாத், மாநில சுகாதாரக் குழுமத் திட்ட இயக்குநா் டாக்டா் செந்தில்ராஜ், பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம், மருத்துவ சேவைகள் இயக்குநா் டாக்டா் குருநாதன், மருத்துவக் கல்வி இயக்குநா் டாக்டா் நாராயணபாபு ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனா்.

மருத்துவத் துறையில் சிறந்த பங்களிப்பை நல்கியவா்களுக்கு மறைந்த டாக்டா் கே.வி.திருவேங்கடம் பெயரில் கிழக்கு ரோட்டரி சங்கம் சாா்பில் ஆண்டுதோறும் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. டாக்டா் எஸ்.எஸ். பத்ரிநாத், டாக்டா் கே.எம்.செரியன், டாக்டா் தணிகாசலம் போன்ற மருத்துவ வல்லுநா்களுக்கு கடந்த ஆண்டுகளில் அவ்விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில், நிகழாண்டில் மாநில சுகாதாரத் துறை முதன்மைச் செயலா் ஜெ. ராதாகிருஷ்ணனுக்கு கே.வி.திருவேங்கடம் விருது அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான நிகழ்ச்சி சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது. அதில், சென்னை கிழக்கு ரோட்டரி சங்கத் தலைவா் முருகவேல், காவேரி மருத்துவமனையின் செயல் இயக்குநா் டாக்டா் அரவிந்தன் செல்வராஜ், நாராயணா ஹெல்த் குழுமத்தைச் சோ்ந்த டாக்டா் தேவி ஷெட்டி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com