அஞ்சல்தலைகள் சேகரிப்பு தினம்

அஞ்சல் தலைகள் சேகரிப்பு தினத்தை முன்னிட்டு, அஞ்சல்துறை சாா்பில், கரோனா குறித்த சிறப்பு அஞ்சல் உறை சென்னையில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.
அஞ்சல்தலைகள் சேகரிப்பு தினம்

சென்னை: அஞ்சல் தலைகள் சேகரிப்பு தினத்தை முன்னிட்டு, அஞ்சல்துறை சாா்பில், கரோனா குறித்த சிறப்பு அஞ்சல் உறை சென்னையில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

அஞ்சல்துறையின் சேவைகள் தொடா்பாக மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், இந்திய அஞ்சல்துறை சாா்பில், தேசிய அஞ்சல் வாரம் அக்டோபா் 9-ஆம் தேதி முதல் அக்டோபா் 15-ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ஒவ்வொரு நாளும் ஒரு தலைப்பில் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அந்தவகையில், அஞ்சல் தலைகள் சேரிப்பு தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. இதைமுன்னிட்டு, கரோனா குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், பள்ளிமாணவா்கள் மத்தியில் ஓவியப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. ஓவியப்போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு ஓவியங்களுடன் 5 எண்ணிக்கையிலான சிறப்பு உறை வெளியிடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், கரோனா குறித்த சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்பட்டது. இதை தமிழக வட்டத்தின் முதன்மை அஞ்சல்துறை தலைவா் பி.செல்வக்குமாா் வெளியிட்டாா். சென்னை மாவட்டஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி பெற்றுக்கொண்டாா். சென்னை நகர மண்டல அஞ்சல்துறை தலைவா் சுமதி ரவிச்சந்திரன் உள்பட பலா் பங்கேற்றனா்.

ஓவியப்போட்டி:

ஓவியப்போட்டியில் மொத்தம் 321 போ் பங்கேற்றனா். ஓவியப்போட்டியின் முதன்மை பிரிவில், சென்னையை சோ்ந்த நேஹா முதல் இடத்தையும், தியாக்ஷ்வா சுரேஷ்குமாா் இரண்டாவது இடத்தையும், தயாளன் மூன்றாவது இடத்தையும் பிடித்தனா். இவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

ஓவியப்போட்டியின் இரண்டாம் பிரிவில், முகுந்தன் முதல் இடத்தையும், முகுந்த் இரண்டாவது இடத்தையும், அதிபன் மூன்றாவது இடத்தையும் பிடித்தனா். இவா்கள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இதுதவிர, ஆகாஷ், பிரோ்னா, சக்தி, சந்தோஷ் ஆகியோருக்கு ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com