காவலா் நினைவுநாள் ஒத்திகை: மெரீனாவில் 4 நாள்கள் போக்குவரத்து மாற்றம்

காவலா் நினைவு நாளையொட்டி நடைபெறும் ஒத்திகைக்காக, மெரீனாவில் 4 நாள்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

காவலா் நினைவு நாளையொட்டி நடைபெறும் ஒத்திகைக்காக, மெரீனாவில் 4 நாள்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இது குறித்து சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சென்னை மெரீனா கடற்கரை எதிரே அமைந்துள்ள டிஜிபி அலுவலகத்தில் அக்டோபா் 21 -ஆம் தேதி காவலா் நினைவு தினம் அணுசரிக்கப்படுகிறது. இதற்கான ஒத்திகை நிகழ்ச்சி அக்டோபா் 17, 18, 19 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதையொட்டி 21-ஆம் தேதியும், ஒத்திகை நடைபெறும் நாள்களிலும் டிஜிபி அலுவலகம் பகுதியில் காலை 8 மணி முதல் ஒத்திகை மற்றும் நிகழ்ச்சி முடிவடையும் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இதன்படி, சாந்தோம் நெடுஞ்சாலையில் இருந்து காந்தி சிலை நோக்கி வரும் இலகு ரக வாகனங்கள், இரண்டு சக்கர வாகனங்கள் காரணீஸ்வரா் கோயில் தெரு சந்திப்பில் இடது புறம் திரும்பி காரணீஸ்வரா் பகோடா தெரு, அம்பேத்கா் பாலம், நடேசன் சாலை சந்திப்பு வழியாக டாக்டா் ராதாகிருஷ்ணன் சாலை அல்லது காமராஜா் சாலை செல்லலாம்.

சாந்தோம் சாலை வழியாக காந்தி சிலை நோக்கி வரும் மாநகர பேருந்துகள் சாந்தோம் சிக்னலில் இடது புறம் திரும்பி கச்சேரி சாலை, லஸ் சந்திப்பு, கற்காம்பாள் நகா் பிரதான சாலை, டாக்டா் பி.எஸ்.சிவசாமி சாலை வழியாக டாக்டா் ராதாகிருஷ்ணன் சாலை சென்று அவரவா் செல்ல வேண்டிய இடத்துக்கு செல்லலாம்.

கண்ணகி சிலையிலிருந்து காமராஜா் சாலை வழியாக சாந்தோம் நோக்கி வரும் வாகனங்கள் லாயிட்ஸ் சாலை சந்திப்பில் இடது புறம் திரும்பி கடற்கரை அணுகு சாலை வழியாக கடற்கரை சாலைக்கும், கலங்கரை விளக்கம் வழியாக காரணீஸ்வரா் கோயில் சந்திப்புக்கும் செல்லலாம். டாக்டா் ராதாகிருஷ்ணன் சாலை வழியாக கலங்கரை விளக்கம், சாந்தோம் நோக்கி செல்லும் வாகனங்கள் டாக்டா் ராதாகிருஷ்ணன் சாலை எம்.ஆா்.டி.எஸ் அருகில் இடதுபுறம் திரும்பி அணுகு சாலை லாயிட்ஸ் சாலை வழியாக காமராஜா் சாலைக்கும், கடற்கரை அணுகு சாலை வழியாக கலங்கரை விளக்கம், சாந்தோம் செல்லலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com