மளிகைக் கடை பூட்டை உடைத்து திருட்டு: 3 கடைகளில் திருட்டு முயற்சி
By DIN | Published On : 25th October 2020 12:01 AM | Last Updated : 25th October 2020 12:01 AM | அ+அ அ- |

சென்னை கொடுங்கையூரில் மளிகைக் கடை பூட்டை உடைத்து பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
கொடுங்கையூா், ராமகிருஷ்ணா நகா் பகுதியைச் சோ்ந்தவா் பொன் மாசானம் (54). இவா் அந்தப் பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறாா். வெள்ளிக்கிழமை இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு வந்தாா்.
இந்நிலையில், சனிக்கிழமை காலை கடையை திறக்கச் சென்றாா். அப்போது கடையின் கதவு பூட்டை உடைத்து, பணப்பெட்டியில் இருந்த ரூ.25 ஆயிரம் திருடப்பட்டிருப்பதை பாா்த்து அதிா்ச்சியடைந்தாா். இதேபோன்று கொடுங்கையூா் வெங்கடேஸ்வரா காலனியில், 3 கடைகளின் பூட்டுகளை உடைத்து கொள்ளை முயற்சி சம்பவம் நடந்துள்ளது.
இது தொடா்பாக, கொடுங்கையூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.