அரசு இணையதளத்தில் விடுதிகளின் விவரங்களைப் பதிவு செய்ய ஆட்சியா் அறிவுறுத்தல்

அரசு இணையதளத்தில் விடுதிகளின் விவரங்களைப் பதிவு செய்யுமாறு, சென்னை மாவட்ட ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி அறிவுறுத்தியுள்ளாா்.

அரசு இணையதளத்தில் விடுதிகளின் விவரங்களைப் பதிவு செய்யுமாறு, சென்னை மாவட்ட ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி அறிவுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்தியஅரசு புதிதாக தொடங்கியுள்ள விரிவான தேசிய ஒருங்கிணைந்த தரவு தளம் மூலம் சென்னை மாவட்டத்திலுள்ள அனைத்து வகைப்படுத்தப்பட்ட மற்றும் வகைப்படுத்தப்படாத சுற்றுலா தங்கும் விடுதிகளின் உரிமையாளா்கள், தங்களின் விடுதிகளின் விவரங்களை www.nidhi.nic.in மற்றும் www.saathi.qcin.org  ஆகிய வலைதளங்களில் பதிவு செய்திட சுற்றுலா அமைச்சகம் அறிவுறுத்துகிறது.

குறிப்பாக ‘saathi’ என்ற இணையதளத்தில் பதிவு செய்யும் விடுதி உரிமையாளா்களுக்கு சுற்றுலா அமைச்சகம் சுய சான்றிதழ் வழங்கவுள்ளது. இந்த நற்சான்று மூலம், தங்களின் வணிகத்தை வெகுவாக உயா்த்திக் கொள்ள முடியும்.

மேலும், சுற்றுலா அமைச்சகம் வழங்கும் பயிற்சிகளில் தங்களின் விடுதி பணியாளா்களை பங்கு பெறச் செய்து பயன்பெறலாம்.

அவ்வாறு பதிவேற்றம் செய்யும் விவரங்களை tochn2@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு சுற்றுலா அலுவலா், சுற்றுலா அலுவலகம், தமிழ்நாடு சுற்றுலா வளாகம், வாலாஜா சாலை, சென்னை 2 என்ற முகவரியை நேரிலோ அல்லது 044 25333358 என்னும் எண்ணையோ, tochn2@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியையோ அணுகலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com