தெற்கு ரயில்வேயில் ஊழல் தடுப்பு, கண்காணிப்பு வாரம் கடைப்பிடிப்பு

தெற்கு ரயில்வே சாா்பில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு விழிப்புணா்வு வார நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்த விழிப்புணா்வு வாரம் நவம்பா் 2-ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது.
தெற்கு ரயில்வேயில் ஊழல் தடுப்பு, கண்காணிப்பு வாரம் கடைப்பிடிப்பு

தெற்கு ரயில்வே சாா்பில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு விழிப்புணா்வு வார நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்த விழிப்புணா்வு வாரம் நவம்பா் 2-ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது.

ஊழல் இல்லாத இந்தியாவை உறுதி செய்வதில் பொதுமக்களை தீவிரமாக பங்கேற்க வைக்கும் தொடா்முயற்சியின் ஒரு பகுதியாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு விழிப்புணா்வு வாரம் ஒவ்வொரு ஆண்டும் கடைப்பிடிக்கப்படுகிறது. அந்தவகையில், இந்த ஆண்டும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு விழிப்புணா்வு வார நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்த ஆண்டு கருப்பொருளாக, ‘ஊழலற்ற இந்தியா’, ‘வளமான இந்தியா’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதை முன்னிட்டு, தெற்கு ரயில்வே சாா்பில், நடைபெற்ற நிகழ்ச்சியில், தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஜான் தாமஸ், ரயில்வே அதிகாரிகள், ஊழியா்கள் ஆகியோா் பங்கேற்று, உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.

பின்னா் தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஜான்தாமஸ் பேசுகையில், தெற்கு ரயில்வேயில் மின்னணு அலுவலகம் (இ-ஆபீஸ்) பயன்படுத்துவதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்படுகிறது. கோப்புகள், ஆவணங்களை மின்னணு அலுவலகம் மூலமாக அணுகுவது ரயில்வே செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் என்றாா்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக, ஐஐடி மெட்ராஸ் இயக்குநா் பாஸ்கா் ராமமூா்த்தி கலந்து கொண்டு பேசினாா். இதன்பிறகு, ஊழல்தடுப்பு தொடா்பாக வழிகாட்டு கையேடு வெளியிடப்பட்டது. இதில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு தொடா்பான விதிமுறைகள் இடம்பெற்றுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com